பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் விஜய் டிவி தற்போது திடீரென ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இன்று இரவு 11:59 உடன் வாக்கு எண்ணிக்கை நிறைவடை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி சுமார் 74 நாட்களை கடந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அமுதவாணன், மணிகண்டன், ஏடிகே ஆகிய மூன்று பேரும் நாமினேஷன் ஃப்ரீ சோனில் இருப்பதால் மீதம் இருக்கும் 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் இருக்கின்றனர். கதிரவன், தனலட்சுமி, ஷிவின், ரட்சிதா, விக்ரமன், அசீம், மைனா என மொத்தம் ஏழு பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். ஏழு பேரும் சரிக்கு சமமான போட்டியாளர்கள் என்பதால் இந்த வாரம் யார் வெளியேறப் போவார்கள் என்கிற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் எப்போதும் வெள்ளிக்கிழமை இரவு 12 வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று சனிக்கிழமை வார இறுதி நாட்களில் ஒவ்வொருவராக காப்பாற்றப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். ஆனால் இந்த வாரம் வித்தியாசமாக வியாழக்கிழமை இரவுடன் வாக்கு எண்ணிக்கை முடிவட இருப்பதாக விஜய் டிவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதற்காக வெளியிடப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. சிலர் இந்த வாரம் கண்டிப்பாக தனலட்சுமி, மைனா, கதிரவன் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று தங்களது யூகங்களை கூறி வருகின்றனர். வேறு சிலரோ எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்வாரே அதற்கு ஏற்றார் போல் இந்த வாரம் எதிர்பாராத ஒரு எலிமினேஷன் இருக்கப் போகிறது அதற்காகத்தான் இப்படி ஒரு அறிவிப்பு என்று கூறி வருகின்றனர்.

பல யூகங்கள் உலவி வரும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப் போவார்கள் என்கிற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நமது இணையதளத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற (Unofficial) வாக்கெடுப்பில் மைனா பின்தங்கி இருக்கிறார். ஆனால் மைனா விஜய் டிவியில் இருந்து வந்தவர் என்பதால் அவரை காப்பாற்றவே பிக்பாஸ் குழு முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமி, மைனா, கதிரவன் ஆகிய மூவரில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. மேலும் இணைய நெட்டிசன்களின் யூகப் படி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்லுவது போல, எதிர்பாராத ஒருவரும் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று உங்கள் கருத்தை கமெண்ட்டில் தெரிவிக்கவும். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு வாக்களிக்க விரும்பினால் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி வாக்களிக்கவும். https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/
