சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் மணிமேகலை. 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஹுசைன் என்பவரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறியும் கரம் பிடித்தார். இவர் கணவரோடு செய்யும் அலப்பறைகளை பார்த்து நாள் முழுக்க சிரித்து கொண்டே இருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும்! அவ்வளவு குறும்பு கலந்த நகைச்சுவைகளை இவரும் இவர் கணவரான ஹுசைனும் சேர்ந்து செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர்! வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மணிமேகலைக்கு புதிய அடையாளத்தைக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். மூன்று சீசன்களாக கோமாளியாக வந்து அசத்தி வருகிறார். திருமணத்திற்குப் பிறகு இரண்டு குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியுள்ளனர். தனது சொந்த உழைப்பில் கார், நிலம் என வாங்கி அதை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகின்றனர். இவர்களின் இந்த வீடியோக்களை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Hussain Manimegalai
அந்த வகையில் தற்போது புது வீடியோ ஒன்றை மணிமேகலை வெளியிட்டுள்ளார். அதில் திருப்பூருக்கு கிராமத்திற்கு சென்றுள்ள மணிமேகலை அங்கு அரசு பேருந்தில் பயணம் செய்கிறார். அப்போது அவர் செய்யும் அலப்பறைகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார். பேருந்தில் பயணம் செய்து பல வருடம் ஆகிவிட்டதால் அந்த கனவை நிறைவேற்றியுள்ளார் மணிமேகலை. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video…