CWC நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன்.! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட மணிமேகலை

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை நிரந்தரமாக விலகி விட்டதாக தற்போது அவரே அறிவித்து இருக்கிறார். இதனால் மணிமேகலை ரசிகர்கள் அதிரிச்சியில் உறைந்து உள்ளனர். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சற்றே வித்தியாசமான ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியில் சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளி என்கிற பெயரில் வைத்துக்கொண்டு சமைக்கும் சமையல் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதில் பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, மணிமேகலை ஆகிய நான்கு பேர் மட்டுமே தொடர்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலா கோமாளியாக வரவில்லை. மேலும் சிவாங்கி கோமாளியில் இருந்து குக்காக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலரையும் உள்ளே இறக்கி இருக்கின்றது குக் வித் கோமாளி டீம். மேலும் 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CWC நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகுகிறேன்.! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட மணிமேகலை 1
அதில் மேகா படத்தின் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் ஷெரின் ஷிருங்கர். ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் படை இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் எழில், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் என்னும் கலையில் கோல்ட் மெடல்லிஸ்ட் ஆக இருக்கும் கோபிமற்றும் சிவாங்கி ஆகிய 10 பேர் குக்குகளாக களம் இறங்கியிருந்தனர். இதில் நாய் பட சேகர் கிஷோர் கடந்த வாரம் எலிமினேட் செய்ய செய்து வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது. அதில் திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படங்களின் வரும் கெட்டப்புகளை கோமாளிகள் போட்டிருந்தனர். இந்த வாரம் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகி விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

குக் வித் கோமாலியின் எனது கடைசி எபிசோட் இன்று. “நானே வருவேன்” கெட்அப்பில் “நா வரமாட்டேன்” என்று அறிவிக்கிறேன். 2019 முதல் சீசன் 1 தொடங்கி CWC இல் நான் செய்த அணைத்து விஷயங்களுக்கும் அனைவருமே அபரிமிதமான அன்பைப் பொழிந்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்தவராக இருக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். CWC யிலும் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதில் நான் நீதி செய்தேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது. நான் என்ன செய்தாலும் அதே அன்பைப் பெற முயற்சி செய்கிறேன்..அன்புடன் மணி என்று பதிவிட்டுள்ளார்.

 

இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர் விலகியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்