நடிகை திரிஷாவிடம் நான் மன்னிப்பே கேட்கவில்லை, அவர் மரணித்து விடு என்று தான் சொன்னேன் ஆனால் அது தவறாக மன்னித்துவிடு என பொருள் கொள்ளப்பட்டது என்று சொல்லி மன்சூர் அலிகான் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை நாயகனாக பலம் வந்து கொண்டிருக்கிறார் மன்சூர் அலிகான். ‘லியோ’ படத்தில் நடித்த த்ரிஷாவிடம் ஒரு ரேப் சீன் காட்சிகள் கூட இல்லை என்று சொல்லி அதிர வைத்திருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இன்னும் சொல்லப்போனால் ‘லியோ’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட அவரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு நடிகர் சங்கம் வரை சென்றது. இதனால் பிரச்சனை மேலும் மேலும் பெரிதாகிக் கொண்டே சென்றது.

தொடர்ந்து நடிகையும், பாஜகவின் உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய தலைவருமான நடிகை குஷ்பூ மன்சூர் அலிகான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போவதாக அறிவித்திருந்தார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விளக்கமளித்த மன்சூர் அலிகான் காவல் நிலையத்திலும் ஆஜராகி விளக்கமளித்திருந்தார். தொடர்ந்து அடுத்த நாளே திரிஷாவிடம் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. “சக நடிகை திரிஷாவே என்னை மன்னித்து விடு” என்று சொல்லி அவர் வெளியிட்ட அந்த அறிக்கைக்கு பின்னர், “மன்னிப்பு தவறு செய்வது மனித குணம் மன்னிப்பது தெய்வ குணம்” என்று பதிவிட்டு திரிஷாவும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் மன்சூர் அலிகானிடம், பிரச்சனை தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்ட பிறகும் பலர் மீது மான நஷ்ட வழக்கு ஏன் போட்டுள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மன்சூர் அலிகான், “நான் த்ரிஷாவிடம் மன்னிப்பை கேட்கவில்லை என்னுடைய பிஆர்ஓ வை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, “அடக்க நினைத்தால் அடங்கமறு, திரைநாயகி திரிஷாவே என்னை மரணித்து விடு என்று தான் சொன்னேன், ஆனால் அவர் என்னை மன்னித்துவிடு என்று புரிந்து கொண்டு தவறாக அதை அறிக்கையாக வெளியிட்டு விட்டார். அந்த நேரத்தில் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என அமைதியாக இருந்து விட்டேன், நான் சொன்னது இது தான்” என்று கூறியுள்ளார். Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Puthiya Thalaimurai