கராத்தே செய்கிறேன் என்று தலையில் தீப்பிடித்த மன்சூர்..சக்கு சக்கு பத்திக்கிச்சு என்று கலாய்த்து விட்ட ப்ளூ சட்டை

வெளியிட்டது

சமூக காலமாக டிவிகளில் வைரலாகி வரும் ஒரு நபர் தான் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் மிகப்பெரிய வில்லனாக 90ஸ் கிட்ஸ்களுக்கு அறிமுகம் ஆனவர். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். விஜயகாந்தும் இவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்தின் பல படங்களில் இவர் வில்லனாக நடித்து இருப்பார். விஜயகாந்த் உடல்நலம் குன்றிய சமயத்தில் ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவரை பார்த்தபடியே அருகிலேயே அமர்ந்து கண்கலங்கியபடி இருந்தார் மன்சூர் அலிகான். வெளியில் கெத்தாக இருந்தாலும் குழந்தை மனசாக இருப்பார். காமெடியாக பல விசயங்கள் செய்து கொண்டிருப்பார். இதை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜே ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார். அவரின் யதார்த்தமான ஆட்டிட்யூட் எனக்கு பிடிக்கும் என்று கூறியிருப்பார்.

அவர் பேசும் போது, மன்சூர் அலிகானின் நேர்காணல் பார்த்துக் கொண்டிருந்தபோது நிரூபர் சீரியஸாக கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார் ஆனால் மன்சூர் ஒரு இலையை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருப்பார். அவருக்கு கைதி படத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்க எண்ணியிருந்தேன். அவரை வேறு படத்தில் கொண்டு வருவேன் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் கூட அவரது மகனை ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகம் செய்து வைத்துவிட்டு மகனையே கலாய்த்து தள்ளினார். இதெல்லாம் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக அமைந்துள்ளது. சமீபத்தில் விக்ரம் படத்தில் வந்த சக்கு சக்கு பாடலுக்கு யூடியூப் ஆங்கர்களுடன் சேர்ந்து ஆடினார். அந்த வீடியோவும் வைரலானது. இவ்வாறு சமீப காலமாக வைரல் மன்னனாக வலம் வருகிறார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில் அவரின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதை ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்து இருக்கிறார். அதில் பழைய வீடியோ ஒன்றில் கராத்தே செய்கிறேன் என்று நெருப்பு எரியும் ஓட்டில் தலையை விட்ட மன்சூரின் தலையில் நெருப்பு பற்றிக் கொள்கிறது. இதை பகிர்ந்து சக்கு சக்கு பத்திக்கிச்சு என்று பகிர்ந்துள்ளார் மாறன். சும்மாவே மன்சூர் அலிகான் வச்சி செய்வார். இப்போது ப்ளூ சட்டை தானாக வந்து தலையை கொடுக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்