எனக்கு இது தேவைதான்..பஞ்சாங்கம் பத்தி பேசுனது தப்புதான்..என் அறியாமையை உணர்கிறேன்..ட்ரோல்ஸ்க்கு பதில் அளித்த மாதவன்

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். அலைபாயுதே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இஸ்ரோவில் பணி புரிந்த விஞ்ஞானி நம்பி நாராயணினின் வாழ்க்கை வரலாறு கதையில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது. மாதவனை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். நம்பி நாராயணன் பொய் வழக்குகள் போடப்பட்டு பின்னர் சட்ட போராட்டம் நடத்தி அதிலிருந்து எவ்வாறு வெற்றி பெற்றார் என்பது குறித்த கதை. இந்த படம் வருகின்ற ஜூலை 1 அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது.

எனக்கு இது தேவைதான்..பஞ்சாங்கம் பத்தி பேசுனது தப்புதான்..என் அறியாமையை உணர்கிறேன்..ட்ரோல்ஸ்க்கு பதில் அளித்த மாதவன் 1

விளம்பரம்

இந்த படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் மாதவன் பேசிய பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரானது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் 800 மில்லியன், 900 மில்லியன் செலவழித்து 30 முறை செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய பின்புதான் வெற்றி பெற்றது. இதற்காக அவர்கள் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் இந்தியா முதன் முறையாக சிறிய இன்ஜினை வைத்துக் கொண்டு, குறைந்த தூரம் செல்லக்கூடிய விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் “பஞ்சாங்கம்” என்று கூறினார்.

தொடர்புடையவை  அஜித் ரசிகர்களுடன் அமர்ந்து துணிவு படத்தை பார்த்து ரசித்த நயன்தாரா..! வெளியான புகைப்படங்கள்

எனக்கு இது தேவைதான்..பஞ்சாங்கம் பத்தி பேசுனது தப்புதான்..என் அறியாமையை உணர்கிறேன்..ட்ரோல்ஸ்க்கு பதில் அளித்த மாதவன் 3

விளம்பரம்

இந்த திட்டத்தின் போது நம்பி நாராயணின் மருமகன் அருணன் அதன் திட்ட இயக்குனராக இருந்தார். அவர் பஞ்சாஙகத்தைப் பார்த்து வானியல் முறைகளை அறிந்து கொண்டு மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு செயற்கைகோளை அனுப்பினார் என்று கூறினார். இதற்கு முக்கிய காரணம் பஞ்சாங்கம்தான் என்றும் கூறினார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையானது. பலரும் மாதவனை சங்கி, பூமர் என திட்டி மீம்ஸ்களை பறக்கவிட்டனர். இந்த செய்தியை பிரபல தனியார் நிறுவனம் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தது. அதை ட்வீட் செய்து மாதவன் இதற்கு தான் தகுதியானவன்தான் என்று பதிவிட்டு இருந்தார்.

விளம்பரம்

அதில் எனக்கு இது தேவைதான். எனது அறியாமையை நான் உணர்கிறேன். அல்மானக் என்பதை தமிழில் பஞ்சாங்கம் என்று கூறியதால் இந்த விமர்சனங்களுக்கு நான் தகுதியானவன்தான் என்று கூறியுள்ளார் மாதவன். இந்த விஷயங்கள் எல்லாம் நாம் வெறும் 2 சாதாரண என்ஜின்களை வைத்து செயற்கைகோளை அனுப்பிய சாதனையை மாற்றிவிடாது. விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையவை  நந்தன் படத்தின் யெக்கி யெக்கி பாக்குறேன் பாடல் Video Song வெளியாகியது..!

எனக்கு இது தேவைதான்..பஞ்சாங்கம் பத்தி பேசுனது தப்புதான்..என் அறியாமையை உணர்கிறேன்..ட்ரோல்ஸ்க்கு பதில் அளித்த மாதவன் 5

விளம்பரம்

இது குறித்து கருத்து தெரிவித்ந இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பதெல்லாம் அறியாமை என்று கூறினார்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment