மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த ‘ரெட் சாண்டல் உட்’ படத்திலிருந்து சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர், நடிகர் என பன்முக திறமையாளராக வலம் வந்த மாரிமுத்து சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகி இருந்தார். டப்பிங் பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென அசௌகரியமாக உணர்ந்ததால் அவர் மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் பார்க்கிங் வரை சென்ற அவர் உயிர் பிரிந்துள்ளது. இது தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கள் வீட்டில் ஒருவராக மாரிமுத்துவை கருதி வந்த பலருக்கும் இது பேரிடியாக அமைந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இருந்து வீட்டை விட்டு ஓடி வந்து சென்னையில் திரைப்படங்களை இயக்கும் ஆர்வத்தின் காரணமாக வந்தவர் தான் மாரிமுத்து. வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பின்னர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கிய அவர் நடிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பி இருந்தார். எதிர்நீச்சல் சீரியல் மூலமாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கும் அவர் விக்ரம், ஜெயிலர் போன்ற பல படங்களின் நடித்திருக்கிறார். இவர் நடித்து முடித்திருக்கும் திரைப்படமான ‘ரெட் சாண்டல் உட்’ ஒரு திரைப்படத்திலிருந்து அவர் நடித்த சில காட்சிகளை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
கேஜிஎஃப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு, எம்.எஸ். பாஸ்கர், கணேஷ் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் லோடுமேன் ஆட்டோக்காரராக பணியாற்றி வருவது போலவும் தனது மகனும் தான் போல் கஷ்டப்படக் கூடாது என்று அவர் பேசுவது போலவும் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: IBC Cinema