இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா தற்போது அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகராக இருந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பு என்கிற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு மஞ்சள் வெயில், கலிங்கா, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் என்கிற படங்களில் எல்லாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

பின்னர் இவர் தல அஜித் உடன் இணைந்து நடித்த வீரம் படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது. பின்னர் தமிழ் மொழியிலிருந்து விலகி மலையாள திரைப்படங்களுக்கு சென்று இருந்தார் பாலா. மலையாளத்தில் பிரபல பின்னனி பாடகியாக இருந்த அம்ருதாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர் 2010 ஆம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிகளுக்கு அவந்திதா என்கிற மகளும் இருக்கிறார். அம்ருதா தனியாக இசைக் குழு ஒன்றை ஆரம்பித்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சண்டை ஆரம்பமானது. கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்த இவர்கள், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. பின்னர் மீண்டும் எலிசபெத் என்கிற மருத்துவர் உடன் பாலாவிற்கு திருமணம் முடிந்தது.

சமீபத்தில் பாலாவுக்கு கல்லீரல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கேரளாவில் கொச்சியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்திருந்தது. உடல்நிலை சரியில்லாமல் ஐசியூ-வில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது உடல் நலம் தேறி நன்றாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட திருமண நாளை கேக் வெட்டி அவர் கொண்டாடியிருந்தார்.

அந்த வீடியோவில் பேசிய அவர் தான் சிகிச்சையில் இருப்பதாகவும் அந்த சிகிச்சையினால் மரணம் கூட நிகழ வாய்ப்பிருப்பதாகவும், இத்தனை நாள் தனக்காக பிரார்த்தனை செய்து வந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் முண்ணனி இயக்குனராக இருக்கும் சிறுத்தை சிவாவின் சொந்த தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.