சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் போட்டிகளை காண அரசியல் பிரபலங்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை அனைவரும் படையெடுத்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை காண்பதற்காக பிரபலங்கள் படையெடுத்து இருக்கின்றனர்.

முதலாவதாக லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சதீஷ் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சிஎஸ்கே மேட்சை பார்த்து ரசித்தனர்.

லவ் டுடே, பிகில் போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சிஎஸ்கே மேட்ச்சின்போது தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு த்ரிஷாவிடம் சென்று அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகையாக இருக்கும் நடிகை பிந்து மாதவி தல 7 என்கிற வாசகம் அணிந்த டிஷர்ட் அணிந்தபடி கையில் சிஎஸ்கே கொடியை ஏந்தியபடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு போட்டியை கண்டு ரசித்தார்.

லியோ பட நாயகி திரிஷா மஞ்சள் நிற டி ஷர்டில் வந்து தனது தோழிகளுடன் சிஎஸ்கே மேட்சை பார்த்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

நடிகை மேகா ஆகாஷ் தனது தாயாருடன் வந்து சிஎஸ்கே மேட்சை பார்த்தார். அப்போது அவர் ஒரு கட்டத்தில் விளையாட்டு ஆர்வத்தில் டென்ஷன் ஆகி அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல் ஜி எம் படக் குழுவினர் அனைவரும் நேரில் வந்து போட்டியை ரசித்தனர்.

மேலும் சொப்பன சுந்தரி டீமிலிருந்து ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது அண்ணன் மணிகண்டன் ராஜேஷ், லட்சுமி பிரியா ஆகியோரும் வந்திருந்தனர்.

மேலும் இவர்களுடன் நடிகர் ஜெயராம் பிஜூ மேனன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் வந்திருந்தனர். அவர்கள் ராஜஸ்தான் அணியின் தொப்பியும், டி-ஷர்ட்டும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.!