சூர்யாவின் 48வது பிறந்தநாள்.! கங்குவா படத்தில் இருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ இதோ.!

நடிகர் சூர்யாவின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு தற்போது அவர் நடித்து வரும் கங்குவார் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். 1997 ஆம் ஆண்டு வெளியான “நேருக்கு நேர்” என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் சூர்யா. அதன்பின்னர் இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், பிரெண்ட்ஸ், நந்தா, மௌனம் பேசியதே, கஜினி, பிதாமகன், பேரழகன், வேல், ஆறு, அயன், ஆதவன், சிங்கம், மாற்றான், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்திலும், ராக்கெட்டரி நம்பி விளைவு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் கங்குவா என்கிற திரைப்படத்திலும், ஹிந்தியில் சூரரை போற்று ரீமேக்கிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் 48வது பிறந்தநாள்.! கங்குவா படத்தில் இருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

இதில் கங்குவா திரைப்படம் தற்போது ஒரு பீரியாடிக் ஆக்சன் ஃபிலிம்மாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, கே இ ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி கிரியேஷன்ஸ் ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். அவர்களுடன் யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், போன்ற பலர் நடித்து வருகின்றனர். சூர்யாவின் 39வது படமான இது தற்போது விறுவிறுப்பான ஷூட்டிங் நடந்து வருகிறது. சூர்யா இதில் அரத்தார், வெங்கடர், மண்டாண்கர், முக்காடார், பெருமணத்தார் என்கிற ஐந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த சூர்யாவின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடையவை  விருமன் படத்துல பாட்டு எழுதுன எனக்கு, ஒரு தகவல் கூட சொல்லல..! கடுப்பான சினேகன்

சூர்யாவின் 48வது பிறந்தநாள்.! கங்குவா படத்தில் இருந்து வெளியான கிலிம்ப்ஸ் வீடியோ இதோ.! 3

விளம்பரம்

நள்ளிரவு 12 மணிக்கு இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு தற்போது படக்குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment