“மன்னவன் சாகிறான்” மாரிமுத்துவின் நினைவலைகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்ட சன் டிவி.!

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை உலுக்கி வரும் ஒரு செய்தி தான் நடிகரும் இயக்குனருமான மாரிமுத்துவின் மரணம். 58 வயதாகும் மாரிமுத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தபோதிலும் தற்போது தான் தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து வளர்ந்து வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்திருக்கிறார். டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது அசௌகரியமாக உணர்ந்த அவர், தானே காரை ஒட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இதனால் நெஞ்சுவலி இன்னும் அதிகமாகி அவர் மருத்துவமனை வாசலிலேயே அவரது உயிர் பிரிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"மன்னவன் சாகிறான்" மாரிமுத்துவின் நினைவலைகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்ட சன் டிவி.! 1

இந்த செய்தி கேட்ட ஒட்டுமொத்த தமிழகமும் கலங்கியது. வில்லன் கதாபாத்திரத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு எந்த சீரியலிலும், படங்களிலும் கூட இருந்தது இல்லை. அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் இடம் பிடித்திருந்தால் மாரிமுத்து. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்திலும், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் திடீரென காலமாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடித்த காட்சிகள் இரண்டு மூன்று நாட்களாக ஒளிபரப்பாகி வந்தது. இன்றுடன் அந்த காட்சிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக புதிதாக யார் குணசேகரன் பாத்திரத்தை ஏற்க போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பலரும் வேலராமமூர்த்தி அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், இன்னும் அது உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் ஆதி குணசேகரனை நினைவுகளை தொகுப்பாக ஒரு வீடியோவாக வெளியிட்டு பலரையும் கலங்க வைத்திருக்கிறது சன் டிவி. இந்த வீடியோவை பார்த்த பலரும் கண் கலங்கியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்