நேற்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, 70களில் செல்வராகவன் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திற்கு செல்லும் டைம் டிராவல் மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அப்போது அவர் சந்தோஷத்தில் பாருக்கு செல்கிறார். அங்கு நடந்த சண்டையில் ‘அப்பா விஷால்’ கொல்லப்படுகிறார். பின்னர் மகன் விஷாலை எஸ் ஜே சூர்யா எடுத்து வளர்க்கிறார். மகன் விஷாலுக்கு அப்பா விஷாலை சுத்தமாக பிடிக்காது. தனது தாய் இறந்ததற்கு அப்பா தான் காரணம் என்று மகன் நம்பிக்கொண்டிருக்கிறார். பின்னர் இந்த டைம் டிராவல் மெஷின் மூலமாக கடந்த காலத்திற்குச் செல்லும் விஷாலுக்கு அப்பா நல்லவர் என்று தெரிய வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்பாவைக் கொன்றது யார் என்ன நடந்தது என்ற உண்மையை மகன் விஷால் தெரிந்து கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்தக் கதை சிக்கல் நிறைந்த கதை. கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் கதை நன்றாக வந்திருக்காது. ஆனால் குழப்பம் இல்லாமல் பல இடங்களில் ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை இயக்குனர் நகர்த்தி இருக்கிறார். எஸ் ஜே சூர்யா கிடைத்த கேப் எல்லாத்தையும் பயன்படுத்தி சிக்ஸ் அடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா வின் பல காட்சிகள் சிரிப்பை வரவழைத்தது் இந்த படத்தில் மேக்கப், மியூசிக், சவுண்ட் என எல்லாமே அதிகமாக இருந்தது. ஆனால் இதுதான் படத்திற்கு தேவையாகவும் இருந்தது. விஷால் வேண்டாம் வெறுப்பாக நடித்தது போல இருந்தது் பல இடங்களில் தொய்வு இருந்தது. ஜிவி பிரகாஷின் ரீமிக்ஸ் பல இடங்களில் கை கொடுத்தது.
கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் நன்றாக இருந்தது. இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமா என்று கேட்டால் இல்லை, ஆக்சன் படமா என்று கேட்டால் இல்லை, என்டர்டைன்மென்ட் படமாகவும் இது இல்லை. மூளையை கழட்டி பார்க்கிங்கில் வைத்துவிட்டு 2:30 மணி நேரம் நீங்கள் என்ஜாய் பண்ண விரும்பினால் இது உங்களுக்கான தரமான ஒரு படம் என்று பாசிட்டிவ்வான விமர்சனங்களை கூறினார். நீங்களும் அவரது வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Tamil Talkies