மௌன ராகம் சீசன் 2 சீரியலில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகுல் ராமுக்கு தற்போது நடிகையுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண புகைப்படங்களை ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான மௌன ராகம் சீசன் 2வில் தருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராகுல் ராமச்சந்திரன். கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் மௌன ராகம் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

ஏற்கனவே மலையாளத்தில் பல நாடகங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாள மனோரமா சேனலில் என்னும் ‘சம்பந்தம்’ என்னும் சீரியலில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இது மலையாள சின்னத்திரையில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ள ஒரு தொடராகும்.

இதில் அவருடன் நடித்துவரும் அஸ்வதி என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. சமீபத்தில் ராகுல் தனது பல வருட காதலியான அஸ்வதியுடன் திருமண நிச்சயதார்த்தத்தை முடித்து இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வந்தது.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் தனது காதலி அஸ்வதியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் தான் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கேரளாவில் வைத்து இன்று திருமணம் முடிந்துள்ளது.

இவர்களுக்கு மௌனராகம் சீரியலின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சாக்லேட் பாயாக இருக்கும் ராகுலின் திருமணத்தால் ராகுலின் ரசிகைகள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

இவர்களின் திருமணத்திற்கு மௌன ராகம் சீரியல் நடிகர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தி இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Embed Code Credits: Shaji pappan Media