மிஷ்கின் அகால மரணமடைந்து விட்டதாக விஜய் ரசிகர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்.! என்ன நடந்தது.?

இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தற்போது விஜய் ரசிகர்கள் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் மிஷ்கின். இவர் தற்போது பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தளபதியுடன் இணைந்து ‘லியோ’ திரைப்படத்தில் முக்கிய ர லில் நடித்திருக்கிறார். இதில் இவர் எந்த ரோலில் நடித்து இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய எழுந்துள்ளது. வில்லனாக நடித்து இருக்கிறாரா.? அல்லது கேங்ஸ்டர் ஆக நடித்துள்ளாரா? என்று தெரியவில்லை.

மிஷ்கின் அகால மரணமடைந்து விட்டதாக விஜய் ரசிகர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்.! என்ன நடந்தது.? 1
இந்த நிலையில் தற்போது லியோ படத்தை தான் பார்த்து விட்டதாகவும் அந்த படம் குறித்தும் நேற்று சமூக வலைத்தளங்களுக்கு பேட்டி அளித்திருந்தார் மிஷ்கின். அப்போது விஜயை ஒருமையில் பேசினார் என்று கூறி விஜய் ரசிகர்கள் தற்போது மிஷ்கினுக்கு அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து அதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பதிவுகளை பகிர்ந்து வரும் விஜய் ரசிகர்கள், “தீதும் நன்றும் பிறர் தர வாரா, எங்கள் தளபதியை ஒருமையில் பேசிய அடி முட்டாளே, மனநலம் குன்றியவனே, அறிவு கெட்டவனே, மன்னிப்புக் கேள், எச்சரிக்கையுடன் தளபதி வெறியர்கள்” என்று பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சிவாங்கி லூசு, குரங்கு..தியேட்டர் வாசலில் ஷிவாங்கியை கழுவி ஊற்றிய நபர் | Don Movie Review

மிஷ்கின் அகால மரணமடைந்து விட்டதாக விஜய் ரசிகர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்.! என்ன நடந்தது.? 3
காலை முதலே இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. மிஷ்கின் அகால மரணம் அடைந்தார் என்கிற வசனங்களுடன் இந்த போஸ்டர் இடம் பெற்றுள்ளதால் பலரும் மிஷ்கினுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சொல்லி அவரை தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

மிஷ்கின் அகால மரணமடைந்து விட்டதாக விஜய் ரசிகர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள்.! என்ன நடந்தது.? 5

விளம்பரம்

ஆனால் இது குறித்து விசாரித்த போது விஜய்யை ஒருமையில் பேசியதற்காக தளபதி ரசிகர்கள் இவ்வாறு செய்துள்ளது பின்னர் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment