திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம்

தமிழ் உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது திரைத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். அதையொட்டி தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். 2002ம் ஆண்டு வெளியான மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் 2004ம் ஆண்டு வெளியான ‘ஐயா’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களின் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 20 ஆண்டுகளில் சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்து முடித்து இருக்கிறார்.

திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் 1
20 ஆண்டுகளில் 75 படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற ஒரே நடிகை நயன்தாரா தான். தற்கால நடிகைகளில் யாருமே இந்த அளவிற்கு சாதனையை செய்ததில்லை. குறிப்பாக நடிகை திரிஷா கூட 67 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால் குறுகிய காலத்திலேயே 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், “நான் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த இடத்தில் நின்று கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் நீங்கள் தான். என்னுடைய திரை வாழ்க்கையின் இதயத்துடிப்பு நீங்கள்தான். என்னை இயக்கும் சக்தியும் நீங்கள்தான். நான் எப்பொழுதெல்லாம் வீழ்கிறேனோ அப்பொழுதெல்லாம் எழுந்து கொள்வதற்கு காரணமாக இருப்பதும் நீங்கள் தான்.

விளம்பரம்
தொடர்புடையவை  தனது வீட்டில் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்.! புகைப்படங்கள் உள்ளே..!

திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் 3
நீங்கள் இல்லாமல் இந்த பயணம் முழுமையடைந்து இருக்காது. அருகில் இருக்கும், தூரத்தில் இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் எப்பொழுதுமே எனக்கு ஸ்பெஷலானவர்கள். ஒவ்வொரு படத்தையும், படம் என்பதை தாண்டி அதை வெற்றியாக மாற்றிக் காட்டிய மாயாஜாலம் நீங்கள். நான் இந்த மைல் கல்லை அடைவதற்கும், கொண்டாடுவதற்கு நீங்களும் காரணமாக இருந்திருக்கிறீர்கள், அருமையான, ஆதரவான, ஒரு உந்து சக்தியான நீங்கள் இந்த இருபது வருடங்களில் என்னை வடிவமைத்தீர்கள், என்றும் அன்புடன் நயன்தாரா” என்று அந்த கடிதத்தை பகிர்ந்திருக்கிறார். பலரும் நயன்தாரா எழுதிய அந்த கடிதத்தை மறுப்பகிர்வு செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Twitter Original Source From: Nayanthara

விளம்பரம்

Leave a Comment