Categories: சினிமா

முடிவுக்கு வந்த “மார்க் ஆண்டனி” படப்பிடிப்பு..! கேக் வெட்டி பிரிந்த நண்பர்கள்.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. படக்குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது விஷால் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் புரட்சித் தளபதி ஆக வலம் வருபவர் நடிகர் விஷால்செல்லமே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்க்கு அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். ஆக்ஷன் மற்றும் போலீஸ் தொடர்பான படங்களில் நடித்து தற்போது கவனம் பெற்று வருகிறார். தற்போது துப்பறிவாளன் பாகம் 2 படத்தில் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லத்தி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே அடுத்த கதையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தை எஸ். வினோத் குமார் தயாரித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த "மார்க் ஆண்டனி" படப்பிடிப்பு..! கேக் வெட்டி பிரிந்த நண்பர்கள்.! இதோ வீடியோ.! 1
அன்பானவன் அசராதவன் அடங்காதவன், திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா போன்ற படங்களை இயக்கியவர் தான் ஆத்விக் ரவிச்சந்திரன் தற்போது அவர் விஷாலுடன் இணைந்து மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வருகிறார் இவர் கடைசியாக இயக்கியிருந்த பஹீரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. எனவே மார்க் ஆண்டனி படத்தை மிக கவனமாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, இயக்குனர் செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி,அபிநயா உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மினி ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து இருக்கிறது. 1960களில் நடந்த கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாக தெரிகிறது. படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டிருந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக எஸ் ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் உயிர் தப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இன்று விஷால் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து பட குழுவினர் பேக் செய்து இருக்கின்றனர். அதற்கு முன்பாக அவர்கள் கேக் வெட்டி பிரிந்து இருக்கின்றனர். அந்த வீடியோவை விஷால் வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: VFF Factory

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்