மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கணவருடன் சேர்ந்து கொண்டு செம்ம Cute ஆக ஆடிய ராஜலக்ஷ்மி.!

சமீபத்தில் வெளியாகி உலகம் எங்கிலும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கும் பாடல் தான் “மைனரு வேட்டி கட்டி” பாடல். இந்த பாடலுக்கு தற்போது ரீல்ஸ் செய்யாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரபலங்கள் தொடங்கி, பொதுமக்கள் வரை அனைவரும் நடனமாடி அதை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஜோடியும் ரீல்ஸ் செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமி போராட்ட களத்தில் பாடியதன் மூலமாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். நாட்டுப்புற பாடல்களை தனது கணவனுடன் சேர்ந்து கொண்டு பட்டித் தொட்டி எங்கும் பரப்பிய பெருமை ராஜலட்சுமிக்கு உண்டு. இந்த பிரபலத்தை கொண்டு அவருக்கு சின்னத்திரையில் பெரிய வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் சிங்கரில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கணவருடன் சேர்ந்து கொண்டு செம்ம Cute ஆக ஆடிய ராஜலக்ஷ்மி.! 1
இருவரும் நன்றாகவே பாடி வந்த நிலையில் ராஜலட்சுமி ஒரு கட்டத்தில் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்து பாடி டைட்டிலையும் வென்றிருந்தார் செந்தில் கணேஷ். தற்போது இருவரும் வெள்ளித்திரையிலும் பாடும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம்பெற்ற “வாயா சாமி” பாடலை பாடியதன் மூலமாக குறுகிய காலத்திலேயே மக்களின் மனம் கவர்ந்த பாடகியாக உருவெடுத்து இருக்கிறார். விருமன் படத்தில் கூட அவருக்கு “மதுரவீரன் அழகுல” என்ற பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அவர் பாடியதை நீக்கிவிட்டு அதிதி சங்கரை பாட வைத்திருந்தனர். இது குறித்து விளக்கம் அளித்த ராஜலட்சுமி, “ஒரு வேலை என்னுடைய குரல் அந்த நடிகைக்கு செட் ஆகாமல் போயிருந்திருக்கலாம், அதனால்தான் மாற்றி இருப்பார்கள் அதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று பெருந்தன்மையாக கூறியிருந்தார். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஜலட்சுமி யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலின் முக்கிய பிரபலம் அதிர்ச்சி மரணம்.! சோகத்தில் ரசிகர்கள்.!

மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு கணவருடன் சேர்ந்து கொண்டு செம்ம Cute ஆக ஆடிய ராஜலக்ஷ்மி.! 3
தற்போது மேடை கச்சேரிகள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருந்து வரும் ராஜலட்சுமி தற்போது instagramயில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தனது கணவருடன் இணைந்து “மைனரு வேட்டி கட்டி” என்கிற பாடலுக்கு கியூட்டாக நடனமாடியிருக்கிறார். வயல்வெளியில் இருவரும் நின்று கொண்டு ஆடிக்கொண்டு இந்த ரீல்ஸை செய்து தற்போது instagram-யில் பகிர்ந்து இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment