நடிகர் அதர்வா மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள மத்தகம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. பிரபல நடிகராக இருந்த முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். பாணா காத்தாடி என்கிற படத்தில் மூலமாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த அதர்வா தற்போது பல படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது பரதேசி தான். அதன் பின்னர் இவர் இரும்புக் குதிரை, ஈட்டி, சண்டிவீரன், கணிதன், இமைக்கா நொடிகள், பூமராங், தள்ளிப் போகாதே, குருதியாட்டம், ட்ரிகர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டத்து அரசன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்தது. தற்போது இவர் மணிகண்டன் உடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் மணிகண்டன் தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின்னர் மணிகண்டனின் மவுசு கூடியிருக்கிறது. இந்த நிலையில் அவர் தற்போது அதர்வாவுடன் இணைந்து இந்த படத்தில் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த தொடரில் நடிகை நிகிலா விமல் நடிகையாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இவர்களுடன் இயக்குனர் கௌதம் மேனன், இளவரசு, டிடி, வடிவுக்கரசி, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் முருகேசன் இயக்க ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது் எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
முப்பது மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஒரு இரவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்திற்கு இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் டீசர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Disney Hotstar Tamil