தமிழின் முண்ணனி நடிகை மீனாவின் கணவர் காலமான செய்தி திரையுலகை மட்டுமல்லாது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இவரது மரணம் குறித்து பலவிதமான கருத்துக்கள் உலா வருகின்றன. சிலர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார் என்று கூற, சிலர் புறா எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சியினால் இறந்தார் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வித்யாசாகருக்கு ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்றி ஏற்பட்டு கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே ஆக்ஸிஜன் கருவி உதவியுடன் தான் சுவாசித்து வந்துள்ளார். பின்னர் பிப்ரவரியில் கொரோனா தொற்று ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 5 மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போதே அவருக்கு இருதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டும் செயலிழந்து விட்டன. இதனால் 95 நாட்கள் எக்மோ சிகிச்சையில் இருந்துள்ளார் சாகர், 15 நாட்களுக்கு முன்னால் தானே மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தபோது சுய நினைவில்லாமல் இருந்ததாக அமைச்சர் மா.சு கூறினார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அவரை காப்பாற்றி விட தமிழக அரசு எவ்வளவோ முயற்சி செய்தது என்றும், இந்தியா முழுமைக்கும் உள்ள மருத்துவமனைகளில் அவரது ரத்தம் பொருந்தி போகும் வகையில் உறுப்புகளைப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் எவ்வளவோ முயற்சித்தும் எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் கூறினார். இதனிடையே மீனா பற்றிய செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஜூலை 12, 2009ம் ஆண்டு மீனா சாகரின் திருமணம் நடைபெற்றது. 13 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த திருமண நாளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ளது. ஒவ்வொரு திருமண நாளுக்கும் அவரின் புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் மீனா. அந்த வகையில் கடந்த வருடம் திருமண நாளன்று புகைப்படத்தை பகிர்ந்து வானவில் போல நீங்கள் வந்து என் வாழ்வை அழகாக வண்ணமயமாக்கினீர்கள், என்று பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழே இன்னும் 14 நாட்களில் 14வது திருமண நாளை கொண்டாடி இருக்க வேண்டும், ஆனால் அதற்குள் இப்படி ஒரு சோகம் நடந்துவிட்டதே என்று அவரது ரசிகர்கள் கலங்கி வருகின்றனர்.