தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா சினிமா துறைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அவருக்கு மிகப் பிரம்மாண்டமாக விழா ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகைகள் ராதிகா, ரோஜா, தேவயானி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகைகளுடனும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

1982 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை மீனா. பின்னர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே அவர் நடித்திருக்கிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் அன்புள்ள ரஜினிகாந்த் என்கிற படத்தில் நடித்தார். பின்னர் அதே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் மீனா. குறிப்பாக முத்து, எஜமான், வீரா போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
மீனாவின் தாய் கேரள மாவட்டம் கண்ணூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். சிறுவயதிலேயே நடிக்கும் ஆர்வத்தால் திரைப்படங்களில் நடித்து வந்த அவரால் பள்ளிப்படிப்பை சரியாக படிக்க முடியவில்லை. இருப்பினும் தனியார் பயிற்சியுடன் பள்ளி படிப்பை முடித்து பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாறு பட்டமும் பெற்று இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுவதிலும் வல்லவராக இருக்கிறார்.
1990களில் நடிகையாக வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அப்போது இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் மீனாவிற்கு ஜப்பான் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் மீனா. பல சின்னத்திரை நாடகங்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார்.
மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா நடிகர் விஜயுடன் இணைந்து தெறி என்கிற படத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து நைனிகா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2022 ஜூன் மாதம் வித்யாசாகர் ராவ் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.
ஏற்கனவே நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு கொரோனா ஏற்படவே நுரையீரல் பாதிப்பு இன்னும் அதிகமானது. இதனால் அவர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். கணவர் இறப்புக்குப் பின்னர் அதிக அளவில் வெளியில் வராத மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். மீனாவின் தோழிகளாக இருக்கும் ரம்பா, சங்கவி, கலா மாஸ்டர், சங்கீதா போன்றவர்கள் மீனாவை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றி தற்போது வெளியில் அழைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை மீனா திரைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால் விரைவில் அவருக்கு விழா ஒன்று நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த விழா தற்போது நடைபெற்று இருக்கிறது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திரைத்துறைக்கு மீனா வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட விழாவில் நடிகை ராதிகா, ரோஜா, தேவயானி, நடிகர் விஜயகுமாரின் மகள்களாக இருக்கும் ப்ரீத்தா, ஸ்ரீதேவி மற்றும் நடிகைகள் சங்கவி, சங்கீதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போனி கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. விரைவில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ தனியா youtube தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை மீனா கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு அவர் பெரிய அளவில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் அவர் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்களும் கசிந்து வருகிறது.
40 ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்ப முடியாத ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகள் அவர் திரைத்துறையில் நடித்து புகழ்பெற வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O