சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர்கள் சமீபத்தில் தங்கள் காதலை அறிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாகவே நடிகர்களுக்கு உடன் நடிக்கும் சக நடிகர்களுடன் காதல் ஏற்படுவது வழக்கம் தான். அதுபோல பல முன் உதாரணங்களை நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 1

விளம்பரம்

வெள்ளித்திரையில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் போன்றவர்கள் படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டு தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். சின்னத்திரையிலும் இதுபோல் சித்து – ஸ்ரேயா, ஆலியா மானசா-சஞ்சீவ், செந்தில்-ஸ்ரீஜா போன்ற நட்சத்திர ஜோடிகள் வலம் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த இருவர் தங்கள் காதலை உறுதிப்படுத்தி இருந்தனர்.

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 3

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் அபினவ் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணுகாந்த் என்பவரும், பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் சம்யுதா என்பவரும் நடித்து வந்தனர். விஷ்ணுகாந்த் ஏற்கனவே சில சீரியல்களின் நடித்து வந்த நிலையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சம்யுதா ஏற்கனவே பல youtube தொலைக்காட்சிகளில் நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  செல்லம்மா கழுத்தில் தாலிகட்ட போகும் மாணிக்கம்..! சரியான நேரத்தில் வந்த சித்து..! அதிர்ச்சியடைந்த செல்லம்மா..!

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 5

விளம்பரம்

மேலும் நிறை மாத நிலவே என்னும் வெப் தொடரிலும் அவர் நடித்திருக்கிறார். இந்த தொடரில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது. தொடர்ந்து அவருக்கு விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நாடகம் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 7

விளம்பரம்

இந்த நிலையில் கடந்த வருடம் சம்யுதாவின் பிறந்தநாளில் விஷ்ணுகாந்தை காதலிப்பதாக புகைப்படத்துடன் பகிர்ந்து இருந்தார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த அவர், எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் நான் உன்னைக் கண்டேன். என் வாழ்வின் அனைத்து துன்பங்களையும் மகிழ்ச்சியாக மாற்றிய மனிதர் நீங்கள். நான் உங்களுடன் இருக்கும்போது என்னை நன்றாக உணர்கிறேன். என் வாழ்க்கையில் வந்ததற்கு மிக்க நன்றி. இந்த பிறந்தநாளில் இருந்து, உன்னுடன் என் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறோம்.

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 9

விளம்பரம்

இதுவரை நீங்கள் எனக்குக் கொடுத்த அன்புதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆதரவாகும், இப்போது நாங்கள் இருவரும் உங்கள் அனைவரிடமிருந்தும் அதை இரட்டிப்பாகப் பெற விரும்புகிறோம். உங்கள் அன்பான இதயத்தால் எங்கள் இருவரையும் ஆசீர்வதியுங்கள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். இருவருக்கும் அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

தொடர்புடையவை  நீயெல்லாம் ஒரு ரவுடியா? ஓவராக பேசிய மணிமேகலை கையை உடைத்த ராகுல் தாத்தா..! | Cook With Comali

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..! 11

விளம்பரம்

ஒரு வருடம் கடந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த தம்பதிகளுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment