Categories: சினிமா

மீனாவின் 46வது பிறந்தநாள்! கணவர் இல்லாமல் கொண்டாடும் முதல் பிறந்தநாள்.!

வெளியிட்டது

மீனா என்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தமிழ் திரையுலகில் 90களில் பலரின் கனவு நாகியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி, பின்னர் கதாநாயகியாக அறிமுகமானார். ரஜினியுடன் இணைந்து அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “என் ராசாவின் மனசினிலே” என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அடி எடுத்து வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை அவர் பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் என அனைத்து நடிகர்களுடன் நடித்திருக்கிறார் மீனா. மீனாவிற்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூர்வை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவருடன் திருமணம் ஆனது.

மீனாவின் 46வது பிறந்தநாள்! கணவர் இல்லாமல் கொண்டாடும் முதல் பிறந்தநாள்.! 1

இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். விஜயுடன் இணைந்து தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தியிருப்பார் நைனிகா. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ஆறு மாத காலமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தார் மீனா. ஆனால் அவர் நுரையீரல் செயலிழந்து விட்டதால், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைக்காக பல இடங்களில் தேடி அலைந்தார். ஆனால் வித்யாசாகரின் ரத்த வகை ஒத்துப்போகாத காரணத்தினால் அவருக்கு மாற்று உறுப்பு கிடைப்பதில் தாமதமானது. இதனால் அவரின் நுரையீரல் முற்றிலும் செயலிழந்து அவர் கடைசியில் மரணம் அடைந்தார். கணவரின் இறப்புக்கு பின்னர் பொதுவெளியில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருந்து வந்தார் மீனா. ஆனாலும் அவரது தோழிகள் ரம்பா, சங்கவி, சினேகா, கலா மாஸ்டர், சங்கீதா போன்றவர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்து வந்தனர்.

மேலும் அவ்வப்போது மீனா வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதும், மீனாவை வெளியில் அழைத்துச் செல்வதுமாக தோழிகள் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் கூட மீனாவை கடற்கரைக்கு அழைத்துச் சென்று மன ஆறுதலாக இருந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வருகிறது. மேலும் மீனா உறுப்பு மாற்று தானம் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி கடைசியாக instagramயில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். பின்னர் பெரிய அளவில் எந்த பதிவையும் போடாமல் இருந்து வந்தார். இன்று அவரின் 46வது பிறந்தநாள் என்று கொண்டாடப்பட்டிருக்கிறது. பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் கேக் வெட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாக இருக்கிறது.

சினேகாவின் அக்கா கீதாவும், மீனாவின் தோழி ரேணுகாவும் சேர்ந்து மீனாவை அழைத்துச் சென்று கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அந்த வீடியோக்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். கணவர் இறந்த பின்பு அவர் தன்னுடைய முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரைத்துறைக்கு தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக செய்த மீனாவிற்கு நம்முடைய சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்