Categories: சினிமா

“ப்ளீஸ் என்ன தனியா விட்டு போகாதீங்க” கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுத மீனா…இறுதி முத்தம் கொடுத்து வழியனுப்பிய நெஞ்சை உருக்கும் காட்சி..

வெளியிட்டது

மயானத்தில் வைத்து தனது கணவரை கட்டிப்பிடித்து அழுத மீனாவின் செயல் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. நடிகை மீனாவின் கணவர் நேற்று இரவு காலமானர். அவருக்கு வயது 48. ஏற்கனவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இரத்தம் பொருந்த போகாத காரணத்தால் உறுப்புகள் சரியாக கிடைக்கவில்லை. இதனால் அவரது நுரையீரல் மற்றும் இருதயம் செயலிழந்து போனது. இதனால் கடந்த 95 நாட்களாக அவர் எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென காலமானர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ப்ளீஸ் என்ன தனியா விட்டு போகாதீங்க" கணவரின் உடல் மேல் விழுந்து கதறி அழுத மீனா...இறுதி முத்தம் கொடுத்து வழியனுப்பிய நெஞ்சை உருக்கும் காட்சி.. 1

சைதாப்பேட்டையில் வைக்கப்பட்டு இருந்த அவரின் உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். ரஜினிகாந்த், கலா மாஸ்டர், கே.எஸ்.ரவிக்குமார், சரத்குமார் போன்றவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். என்றைக்கும் சிரித்துக் கொண்டே இருக்கும் மீனா இன்று அழுவதைப் பார்க்க முடியவில்லை என்று கே.எஸ் ரவிக்குமார் கண்ணீர் மல்க கூறினார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவரின் உடல் தகனம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது அவரின் உடல் பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

முன்பாக மகள் நைனிகா அவரது உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தார். தற்போது மயானத்தில் வைத்து மீனா இறுதி சடங்குகளை செய்தார். அப்போது துக்கம் தாங்காமல் கணவரின் உடலை கட்டிப்பிடித்து அழுதார். இதை பார்த்த அவரது உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இன்னும் 14 நாட்களில் அவர்களுகரகு 14வது திருமண நாள் வரவுள்ள நிலையில் அவரது கணவர் மறைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video…

Youtube Video Code Embed Credits: Thanthi Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்