2005ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தில் நாயகனாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் விக்ராந்த். நடிகர் விஜயின் உறவினர் இவர். அண்ணன் விஜயை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என களம் இறங்கிய இவருக்கு சோதனை தான் எஞ்சியுள்ளது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை. சிறந்த நடிகராக இருக்கும் இவர் இன்றும் வெற்றிக்காக தமிழ் சினிமாவில் போராட வேண்டிய நிலை உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தனியாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகுவதை விட இவர் இரட்டை நாயகர்கள் கதையில் நடிக்கும் படங்கள் பயங்கர ஹிட் ஆகிறது. இவர் நடித்த பக்ரீத் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து லால் ஸலாம் படத்திலும் நல்ல நடிப்பினை காண்பித்து அசத்தியிருந்தார் விக்ராந்த். தற்போது இவர் நாயகனாக தீபாவளி போனஸ் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக ரித்விகா நடித்து உள்ளார்.ஜெயபால் இப்படத்தினை இயக்கி உள்ளார். இப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. படம் வெற்றிபெற ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : DIVO MUSIC