Categories: சினிமா

நந்தினி கதாபாத்திரத்தை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது – மீனா போட்ட பதிவு

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யாராயை பார்த்தால் தனக்கு பொறாமையாக இருப்பதாக நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பாகுபலி ஆர் ஆர் ஆர் போன்ற படங்களை எல்லாம் பார்த்துவிட்டு, தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து எழுதி இருக்கின்றனர்.

நந்தினி கதாபாத்திரத்தை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது - மீனா போட்ட பதிவு 1

படத்தை லைகா ப்ரொடக்சன் தயாரித்திருக்கிறது. ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கலை வடிவங்களை தோட்டா தரணி செய்திருக்கிறார். படத்திலிருந்து ட்ரெய்லர் டீசர் என அனைத்தும் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் படத்திற்கான புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் வெற்றி தீர்ந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை கோடிகளை தாண்டி இருக்கிறது. தமிழர்களின் பெருமையை உலகறிய செய்ய போகும் பொன்னியன் செல்வன் படத்தில் பல நடிகர்கள் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் நடிகை மீனாவிற்கும் தனக்கு கிடைக்காத வாய்ப்பு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அதில் அவர், சரி.. என்னால் இனி அதை மூடி வைக்க முடியாது. அது என்னை திணறடிக்கிறது. என் உள்ளத்தில் இருப்பதை சொல்லியே ஆக வேண்டும்.
நான் பொறாமைப்படுகிறேன்!! என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஐஸ்வர்யா ராயைப் பார்த்து பொறாமைப்படுகிறேன். ஏனென்றால் அவர் பொன்னியின் செல்வனில் என் கனவு கதாபாத்திரமான நந்தினியாக நடிக்கிறார். மகத்தான வெற்றியைப் பெற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். அனைத்து நடிகர்கள் போலவும் மீனாவுக்கும் பொன்னியின் செல்வனில் நடிக்க ஆர்வம் இருந்துள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்