மெய்யழகன் OTT ரிலீஸ் தேதி மாற்றம்..! அதிகாரபூர்வமாக வெளியான தகவல்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இருந்தது. முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பினை காட்டி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வரும் இவர், அதிக புதிய இயக்குனர்களுடன் படம் நடித்த என்ற பெயரினை பெற்றுள்ளார்.

மெய்யழகன் OTT ரிலீஸ் தேதி மாற்றம்..! அதிகாரபூர்வமாக வெளியான தகவல்..! 1

இவர் தற்போது இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், அரவிந்த்சாமி உடன் மெய்யழகன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். மேலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்து உள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் வெளியாகிய நிலையில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

தற்போது இப்படத்தை OTT-யில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் வருகிற 25ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்