ஜெயிலர் 2 படத்தில் இணையும் தனுஷ்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மேலும் வெளிநாடுகளிலும் சூப்பர் ஸ்டார் நடிப்பு மற்றும் ஸ்டைலால் கவரப்பட்ட பலரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் போலவே ஆட்டோக்களையும் வாங்கி ஓட்டி வருகின்றனர்.

ஜெயிலர் 2 படத்தில் இணையும் தனுஷ்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..! 1

விளம்பரம்

இந்தளவுக்கு ஒரு ரசிகரை தனது வெறித்தனமாக ரசிகர் ஆக மாற்ற முடியும் என்றால் அது நடிகர் ரஜினிகாந்தால் தான் முடியும். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து இருந்த ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியையும் வசூலையும் பெற்று கொடுத்து இருந்தது. மிகப்பெரிய லாபத்தை இப்படம் கொடுத்ததால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கோடிக்கணக்கில் மதிப்பிலான கார்களை ரஜினிகாந்த் , நெல்சன் ,அனிருத்துக்கு வழங்கி இருந்தார்.

ஜெயிலர் 2 படத்தில் இணையும் தனுஷ்..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர். இதுவரை இந்த தகவல் உறுதியாகாத நிலையில், விரைவில் இதுகுறித்து அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment