
டெல்லியில் கடந்த வாரம் ஏற்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேராட்டத்தால் பொது உடமைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் , பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
இதனால் ஏற்பட்ட வன்முறையை ஒடுக்க ராணுவம் தரையிறங்க போராட்டம் கட்டுக்குள் கொண்டு வந்தது. வதந்திகள் பரவாமல் தடுக்க, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் வன்முறை குறைக்க அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இந்நிலையில், டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பேருந்துகள் ஒரு கும்பலால் தீவைத்து கொளுத்தப்பட்டது. இரண்டு போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன.
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி பேராட்டத்தை தீவிரப்படுத்தினர். அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர்.இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுவரை போலீசார், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என 60 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.டெல்லியின் தென் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்த நிலையில், போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் நேற்று மாலை 13 மெட்ரோ நிலையங்களின் வாயில் கதவுகளை மூடியது. இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் பாதிப்படைந்தனர்.
இதனையடுத்து , டெல்லி மெட்ரோ ரெயில்வே கழகம் டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளன. அனைத்து நிலையங்களிலும் வழக்கம்போல் மீண்டும் சேவை தொடங்கியுள்ளது என்று தெரிவித்து உள்ளது.