Categories: சினிமா

நீங்க இல்லைனா நான் இல்ல சார்.! SPB-ன் சமாதியில் கண்கலங்கி நின்ற மைக் மோகன்.!

வெளியிட்டது

நடிகர் மைக் மோகன், மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் நினைவிடத்தில் தற்போது அஞ்சலி செலுத்தியிருக்கிறார். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹரா என்கிற படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். 1977 ஆம் ஆண்டு முதன்முறையாக கன்னட படத்தில் அறிமுகமான இவர், 1980 ஆம் ஆண்டு மூடுபனி என்கிற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். 80, 90களில் ரஜினி, கமல் என இரு துருவங்கள் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து இருந்த நிலையில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தமிழில் மட்டும் 80க்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் மைக் மோகன். இவருடைய படங்கள் அனைத்துமே வெள்ளிவிழா காணும் அளவிற்கு இருந்ததால் இவரை வெள்ளிவிழா நாயகன் என்று பலரும் அழைத்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க இல்லைனா நான் இல்ல சார்.! SPB-ன் சமாதியில் கண்கலங்கி நின்ற மைக் மோகன்.! 1

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். இவருக்கு மைக் மோகன் என பெயர் வர ஒரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது. அதாவது இவர் மேடை பாடகர் போல பல படங்களில் நடித்திருக்கிறார். எனவே இவரை மைக் மோகன் என அழைக்க ஆரம்பித்தார்கள். இவரின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. மெலடி பாடல்களாக இருக்கும் இந்த பாடல்கள் இன்றுடன் உயிர்ப்புடன் இருக்கின்றன. அதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருப்பவர் மறைந்த எஸ் பி பாலசுப்ரமணியம். மோகனுக்கு பல படங்களில் பின்னணி பாடி இருக்கிறார். அந்த பாடல்களின் தொடக்கத்தை கேட்டாலே ரோம சிலிர்ப்பு ஏற்படும் அளவிற்கு அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில் மைக் மோகன், குஷ்பூ, யோகி பாபு ஆகியோர் இணைந்து ஹரா என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இதில் கதாநாயகனாக ஆக்ஷனில் பின்னி எடுத்து இருக்கிறார் மோகன். சமீபத்தில் இதன் முதல் சிங்கிள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மைக் மோகன் மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தனக்கு மைக் மோகன் என பெயர் வர காரணம் எஸ் பி பாலசுப்ரமணியம் தான். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்று, தன்னை மைக் மோகன் என்று அழைக்க தொடங்கியிருந்தனர். எனவே தனக்காக பல படங்களில் பின்னணி பாடிய எஸ்பிபி யின் சமாதியில் மோகன் அஞ்சலி செலுத்தி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Ammapet GKarunakaran

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்