நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் மிரள். இந்த படத்தை ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே திரில்லிங்காக இருப்பதால் இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் படம் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை எம் சக்திவேல் இயக்கியிருந்தார். நேற்று படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் மிகவும் நன்றாக இருந்ததாகவும், திரில்லிங்காக இருந்தது, கிளைமாக்ஸ் காட்சிகள் மிக பயங்கரமாக இருந்தது என்று விமர்சனங்களை கூறியிருந்தனர். இந்த படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

இந்த படத்தின் கதை குறித்து பார்த்தால் ஹீரோ பரத்துக்கு ஏதோ ஆபத்து ஏற்படுவது போல ஹீரோயின் கனவு காண்கிறார். இதனால் அவர்களை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக ஊரிலிருந்து ஹீரோயின் தாயார் வரவைக்கிறார். ஊருக்கு வரும் அவர்கள் திரும்பி செல்லும் வழியில் அந்த கனவில் நடந்த அனைத்து விஷயங்களும் நிஜத்தில் நடக்க தொடங்குகிறது. முகமூடி அணிந்த சில உருவங்கள் அவர்களை தாக்கத் தொடங்குகிறது. அவர்கள் யார் நிஜமாகவே அது பேய்களா அல்லது சைக்கோ கொலையாளிகளா? எதற்காக அவர்களை தாக்குகிறார்கள்? என்பதெல்லாம் குறித்தது தான் படத்தின் மீதி கதை. இந்தப் படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறும்பொழுது ஷார்ட் பிலிம் கதையை ஒரு பெரிய படமாக எடுத்து வைத்திருப்பதாக விமர்சனம் செய்தார்.
மேலும் படத்தில் பேய்கள் வரும் காட்சிகள் காட்டப்படும் போது தியேட்டரே குபீர் என சிரித்ததாகவும், படம் ஒரு மணி நேரம் 55 நிமிடங்கள் தான் ஆனால் கடைசி 10 நிமிடத்தில் தான் கதையை மொத்தமாக காட்டுகிறார்கள். மீதி ஒரு மணி நேரம் 45 நிமிடம் எல்லாம் நொந்து போய், இது பேயா? இல்லை மனிதர்களா? எதுவா வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் என வேதனையுடன் படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். அவரின் விமர்சனங்களை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Talkies.