எங்களுக்கு மகன் பிறந்து இருக்கான்..! மகிழ்ச்சியான செய்தியை சொன்ன செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்..!

வெளியிட்டது

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி செந்திலும், அவரது மனைவியின் ஸ்ரீஜாவும் தற்போது மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கின்றனர். அவர்களுக்கு மகன் பிறந்திருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருக்கின்றனர் திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தனது instagram பக்கத்தில் அறிவித்து இருந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது.  தொடரில் நடித்த இருவர் நிஜ வாழ்வில் ஜோடியாகிவிட்டால் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் பன்மடங்காக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒன்றாக நடித்து பின்பு ரியல் வாழ்க்கையில் ஜோடி ஆனவர்கள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தனர்.

எங்களுக்கு மகன் பிறந்து இருக்கான்..! மகிழ்ச்சியான செய்தியை சொன்ன செந்தில் ஸ்ரீஜா தம்பதிகள்..! 1

அதன் பின்னர் செந்திலும் ஸ்ரீஜாவும் கல்யாணம் கண்டிஷன் சப்ளை என்ற வெப் சீரிஸில் நடந்து வந்தனர். இது மூன்று சீசன்கள் ஓடியது. ஆர்ஜேவாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மிர்ச்சி செந்தில். ரேடியோவில் இவரது குரலுக்கு பல ரசிகர்கள் உண்டு. பின்னால் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலமாக மிகப் பிரபலமானார். ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களை விவாகரத்து செய்துவிட்டு, சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் நடித்த ஸ்ரீஜாவைதிருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றது. பின்னர் செந்தில் பல நாடகங்களில் நடித்து வந்தார். அவர் கடைசியாக நடித்து வந்த நாடகம் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’. இந்த நாடகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் திடீரென ஒரு நாள் நாடகம் முடிவுக்கு வருவதாக அறிவித்தனர்.

பின்னர் எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்த அவர், சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நல்ல செய்தி ஒன்றை அறிவித்திருந்தார். அதில் நாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர்களாக போகிறோம். எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். இதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி என்று அவர் பதிவிட்டு இருந்தார் மிர்ச்சி செந்தில். திருமணம் ஆகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீஜா கர்ப்பமாக இருந்தார். அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் இன்று மகன் பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார் செந்தில். இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்