தனலட்சுமி எலிமினேட் ஆகி மூன்று வாரங்களுக்கு பிறகு தற்போது லைவ்விற்கு வந்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களில் இருந்து ஒருவராக கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி. இவர் சுமார் 75 நாட்களுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வந்தார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் பிக்பாஸில் மிக ஆக்டிவாகவும், தனது விளையாட்டை மிக ஆர்வத்துடனும் விளையாடி வந்தவர் தனலட்சுமி. பிக்பாஸில் இருக்கும் பலருக்கும் வெளியில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு மூலம் பிக்பாஸில் நீடித்து வந்தார்கள். ஆனால் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் உள்ளே சென்று பலரின் மனங்களை கவர்ந்திருந்தார் தனலட்சுமி என்று சொன்னால் அது மிகையில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனலெட்சுமியை வெளியேற்றது ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தனலட்சுமி ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். உள்ளே பல மிக்சர் போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இதுபோன்று நன்றாக விளையாடி வரும் போட்டியாளர்களை வெளியேற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று தனலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர். மேலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் #SaveDhana என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வந்தது. இருப்பினும் தனலட்சுமி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவர் மீண்டும் வைல்ட் கார்டில் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் வரவில்லை. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியும் மூன்று வாரங்களாக அவர் லைவ்வும் வரவில்லை. இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு பதிவையும் போடவில்லை. இதனால் அவர் வைல்ட் கார்டில் வரப்போகிறாரோ என்கிற சந்தேகம் வந்தது. இந்த நிலையில் அவர் இன்று லைவ்வுக்கு வந்திருக்கிறார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், ஏடிகே இருவரையும் தனக்கு பிடிக்கவில்லை. விக்ரமன் பிக்பாஸுக்கு தகுதியே இல்லாத ஒரு ஆள். அவரது கடிதம் எழுதிய டாஸ்க் தொடங்கி, பிரெட் திங்கும் டாஸ்க் வரை அவர் கேம்மை கேமாக விளையாடவில்லை என்று கூறினார். மேலும் பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் அசீம், மணி, கதிரவன் ஆகிய மூவர்தான், ரட்சிதா, மைனா, அமுதவாணன், கதிர் ஆகியோர் இன்று வரை தங்களது உண்மையான முகத்தை இதுநாள் வரை காட்டவில்லை என்றும் அவர் பேசினார். மேலும் வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று வாரங்களுக்குப் பின்பு லைவ் வந்தற்கான உண்மையான காரணத்தையும் ஆவர் கூறியுள்ளார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O