Categories: சினிமா

அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 படத்திலிருந்து “கண்ணே செல்ல கண்ணே..”First Single வெளியானது..!

வெளியிட்டது

அருண், விஜய் எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. “கண்ணே செல்ல கண்ணே..” என்று தந்தை மகளுக்கு இடையேயான அழகிய பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மிஷன் சாப்டர் ஒன் அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 படத்திலிருந்து “கண்ணே செல்ல கண்ணே..”First Single வெளியானது..! 1
லைகா ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படம் பல நாட்களுக்கு முன்பே ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் பெரிய அளவு பகுதிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சுபாஷ் கரனின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. மகளின் மருத்துவத்திற்காகவும், ஆபரேஷனுக்காக லண்டன் செல்லும் ஒரு இந்தியன் சிறையில் அடைக்கப்படுகிறான். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் அவன் சிறையில் மாட்டிக் கொள்கிறான். பின்னர் அவன் எப்படி வெளியே வருகிறான்? அவன் சந்தித்த தடைகள் என்ன என்பது குறித்த படம் தான் ‘மிஷன் சாப்டர் ஒன்’.


படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் ட்ரைலர் வீடியோ நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது படக்குழுவினர் முதல் சிங்கிள் பாடலான “கண்ணே செல்ல கண்ணே..” என்கிற அப்பா மகளுக்கு இடையேயான அன்பை விளக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் இந்த பாடலை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த பாடலை ரவி மற்றும் உத்தாரா உன்னி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பாட, பாடலாசிரியர் விஜய் பாடல்வரிகளை எழுதி இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்