மாலையும் கழுத்துமாக வந்து நின்ற வேதா.! அதிர்ச்சியில் உறைந்து போன காவேரி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் வேதாவை அவரது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்று குழப்பத்தில் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீட்டிற்கு தெரியாமல் திருமணத்தை முடித்து வந்த வேதாவை அவரது தாய் ஏற்றுக்கொள்வாரா இல்லை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவாரா என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாலையும் கழுத்துமாக வந்து நின்ற வேதா.! அதிர்ச்சியில் உறைந்து போன காவேரி.! 1

குழந்தை நல மருத்துவராக இருக்கும் வேதாவின் எதிர் வீட்டில் விக்ரம் தனது மகள் தன்வியுடன் வசித்து வருகிறார். அவரது மூத்த மனைவி தன்வி தன்னுடன் தான் வாழ வேண்டும் என்று சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விக்ரமுக்கு இறுதி தீர்ப்புக்கு முன்னால் வேறொரு திருமணம் நடைபெற்றால் அவரிடமே தன்வியை கொடுப்பதாக ஒப்புக்கொள்கிறார். இதனால் விக்ரம் வேதாவை நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்த விஷயம் வேதாவின் வீட்டிற்கு தெரியாது.

வேதாவின் பிறந்த நாளுக்காக அவரது பெற்றோர்கள் பிறந்தநாள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் வேதா நான் கொஞ்சம் நாள் எங்கள் வீட்டிலேயே இருக்கிறேன் என்று கூறுகிறார். அப்போது வீட்டுக் கதவை திறக்கும் வேதாவின் தந்தையும் தாயும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்