Modhalum Kaadhalum | தமிழ் – தெலுங்கு முறைப்படி நடக்கும் விக்ரம் வேதா திருமணம்.! பந்தக்கால் நடும் நிகழ்ச்சி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மோதலும் காதலும்(Modhalum Kaadhalum)’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தெலுங்கு முறைப்படியும், தமிழ் முறைப்படி என இரு முறைப்படி தற்போது விக்ரம் – வேதா திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் வேதாவுக்கும், அவரது எதிர் வீட்டில் விவாகரத்து பெற்று தனது மகளுடன் வசித்து வரும் விக்ரமுக்கும் இடையே கோர்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முறையாக நடத்த இரு வீட்டாரும் திட்டமிடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Modhalum Kaadhalum Promo
Modhalum Kaadhalum

 

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் விக்ரம் மற்றும் வேதாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக பத்திரிக்கை அடித்து தங்களது அப்பார்ட்மெண்டில் வசிக்கும் அனைவரிடமும் கொடுத்து வருகின்றனர். அப்போது விக்ரமின் தாயாருக்கும், வேதாவின் தாயாருக்கும் பிரச்சினை வருகிறது. எங்கள் முறைப்படி தான் நடைபெற வேண்டும் என்று இருவரும் அடித்துக் கொள்கின்றனர். பின்னர் விக்ரமின் தந்தை இரு முறைப்படியும் திருமணத்தை நடத்தலாம் என்று கூறுகிறார். அதனால் தெலுங்கு முறைப்படியும், தமிழ் முறைப்படியும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர்.

Modhalum Kaadhalum

 

இதனால் பந்தக்கால் நடும் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. பந்த காலை நட்டு விட்டு இருவரும் திருமணத்திற்கு தயாராகின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்