Thendral Vanthu Ennai Thodum | விஜி – அபி உறவை முறிக்க வீடியோ எடுத்து ஆதாரத்தை ரெடி செய்த கண்மணி.!

தென்றல் வந்து என்னை தொடும்(Thendral Vanthu Ennai Thodum) தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அபிக்கு தெரியாமல் விஜி சுடரை வெற்றியுடன் டூருக்கு அனுப்பி வைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை கண்மணி மறைந்திருந்து வீடியோ எடுத்து அபியிடம் போட்டுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார். இதனால் அபிக்கும் விஜிக்கும் இடையே சண்டை எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Thendral Vanthu Ennai Thodum
Thendral Vanthu Ennai Thodum

 

விளம்பரம்

தென்றல் வந்து என்னை தொடும்(Thendral Vanthu Ennai Thodum) தொடரில் தற்போது அபி சுடரை விஜியுடன் டூருக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது சுடரிடம் பேசும் அபி, “தினமும் எனக்கு போன் செய்து பேச வேண்டும், நேரத்திற்கு தூங்க வேண்டும், இரவு தூங்குவதற்கு முன் போன் நோண்டக்கூடாது, ஏதாவது பிரச்சனை என்றால் எனக்கு உடனே சொல்லுங்கள்” என்று விஜயிடம் கூறுகிறார். பதிலுக்கு சுடர்_ நான் சேட்டை எல்லாம் பண்ண மாட்டேன் அம்மா என்று சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் விஜயும், சுடரும் காரில் ஏறி செல்கின்றனர். பின்னர் ஒரு இடத்திற்கு வந்த பிறகு சுடரை விஜி அழைத்துக் கொண்டு வெற்றியின் காரில் ஏறுகிறார்.

தொடர்புடையவை  நான் என்ன துரோகம் பண்னேன் உனக்கு? ஏன் என்ன இப்படி அசிங்கப்படுத்துற? மூர்த்தியை கிழித்து தொங்கவிட்ட ஜீவா.!
Thendral Vanthu Ennai Thodum
Thendral Vanthu Ennai Thodum

 

விளம்பரம்

அப்போது கண்மணி பின்னால் இருந்து விஜி சுடரை அழைத்துக் கொண்டு வெற்றியுடன் காரில் செல்வதை வீடியோ எடுக்கிறார். இந்த ஆதாரத்தை வைத்து விஜிக்கும் அபிக்கும் இடையேயான உறவை முறிக்கிறேன் என்று சொல்லி கண்மணி திட்டம் போடுகிறார். இந்த வீடியோவை அபி பார்த்தால் விஜிக்கும் அபிக்கும் சண்டை எழும் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment