விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல மோதலும் காதலும் என்கிற சீரியலில் இருந்து நடிகர் ஒருவர் விலகி இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த நடிகர் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். இதனால் தற்போது பரபரப்பு விழுந்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு தொடராக இருந்து வருகிறது மோதலும் காதலும். ஆரம்பத்தில் விக்ரம் வேதாவின் காதல் கதை என்று பெயரிடப்பட்ட இந்த தொடர் பின்னர் மோதலும் காதலும் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஒளிபரப்பாகிய குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் சீரியலாக மாறிப்போனது இந்த தொடர். பலரும் இந்த தொடரை விரும்பிப் பார்த்தனர். இந்த தொடரில் சபீர், வேதா, நளினி, உமா பத்மநாபன் போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். விக்ரமுக்கும் வேதாவுக்கும் நடைபெற்ற திருமண காட்சிகள் தற்போது டிஆர்பி யில் நம்பர் ஒன் சீரியலாக இந்த சீரியலை கொண்டு வந்திருக்கிறது. இனி அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்த நாடகத்தில் வில்லனாக நடித்து வந்த பவாஸ் ஜயானி இந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது, “சில தவிர்க்க முடியாத காரணங்களால் நான் மோதலும் காதலும் சீரியலை விட்டு விலகுகிறேன். இந்த ப்ராஜக்ட்டில் வேலை பார்த்தது தனக்கு மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்தது. என்னை காதலித்ததற்கும் ஆதரித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரையும் விரைவில் மற்றொரு நல்ல ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன்.
அனைவருக்கும் என்னுடைய அன்புகள் – ஆதி” என்று பகிர்ந்திருக்கிறார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெகட்டிவ் கதாபாத்திரமாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வந்த அவர் தற்போது விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.