லியோ படத்திலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு மொழிக்காக போஸ்டர்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இன்று தமிழ் மொழிக்கான போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். தளபதி விஜய் நடித்து வரும் 67வது படமான லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் நடிகைகள் திரிஷா, பிரியா ஆனந்த் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. பின்னர் வெளிநாடுகளுக்கும் சென்று படப்பிடிப்புகளை படக்குழுவினர் முடித்திருந்தனர்.

இந்த நிலையில் படம் அடுத்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே படத்தில் இருந்து ‘நான் ரெடி தான் வரவா’ என்கிற ஒரே ஒரு சிங்கிள் மட்டும் வெளியாக இருந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் அடுத்தடுத்த பாடல்களை வெளியிடவும் இசை வெளியீட்டு விழாவை இந்த மாத இறுதியில் நடத்தவும் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்திலிருந்து தெலுங்கு போஸ்டர் மற்றும் கன்னட போஸ்டர்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தனர் படக் குழுவினர்.

இதுபோல ஒவ்வொரு மொழிகளுக்கும் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக் குழுவினர் அறிவித்திருந்த நிலையில் நேற்று தமிழ் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போஸ்டர் வெளியிட்டை தள்ளி வைத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர். அதில், “அமைதியாக இருங்கள். போருக்கு தயாராகுங்கள்” என்கிற வசனத்துடன் இந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது. பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
Keep calm and prepare for battle 🔥#LeoTamilPoster#LEO 🔥🧊 pic.twitter.com/J39jSyTbVa
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 20, 2023
Twitter Original Source From: Lokesh Kanagaraj