நிச்சயதார்த்தத்தை விட்டு விக்ரமுக்காக கோர்ட்டுக்கு வந்த வேதா.! அப்பாவிடம் இணைந்த தன்வி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தன்விகா தற்போது அவரது தந்தையுடன் தான் இணைந்து வாழ வேண்டும் என்று வேதா கோர்ட்டில் கூறியிருக்கிறார். இதனால் கோர்ட்டும் தன்விகா விக்ரமுடன் இணைந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதனால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஏ ஹேன் மொஹாபேட்டின்” என்கிற சீரியலின் தமிழாக்கமே மோதலும் காதலும் என்கிற இந்த சீரியல். இது ஸ்டார் விஜயில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது் குழந்தை நல மருத்துவராக இருக்கும் வேதா விக்ரமின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். விக்ரமின் மகளாக இருக்கும் தன்விகா உடன் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார் வேதா. அவரை தன் மகள் போல பார்க்கிறார் வேதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிச்சயதார்த்தத்தை விட்டு விக்ரமுக்காக கோர்ட்டுக்கு வந்த வேதா.! அப்பாவிடம் இணைந்த தன்வி.! 1

விக்ரம் ஒரு கண்டிப்பான பிசினஸ்மேனாக இருக்கிறார். அவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது தாயார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தன்விகா தனது தந்தையுடன் தான் வாழ விரும்புகிறார். ஆனால் அவரது தாய் விக்ரமிடமிருந்து பிரித்து தன்விகாவை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். இது கோர்ட்டில் வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தன்விகாகவும் வேதாவும் நெருங்கி பழகுவது விக்ரமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறார் விக்ரம். விக்ரமும் தன்வியும் இணைந்து வாழ வேண்டும் என்று வேதாவும் விரும்புகிறார். அதற்காக வழக்கில் வேதா தற்போது சாட்சியாக மாறி இருக்கிறார். கோர்ட்டுக்கு வரும் அவர் தன்வி அவரது தந்தையுடன் தான் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.

தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இதுவரை நடந்த வாதங்களை வைத்து மிருனாளினியிடம் குழந்தையை ஒப்படைக்க இருப்பதாக நீதிபதி தீர்ப்பு வாசித்து வருகிறார். அப்போது உள்ளே வேதாவைப் பார்த்து நீதிபதி இதுதான் நீங்கள் நீதிமன்றத்திற்கு கொடுக்கும் மரியாதையா என்று கேட்கிறார். அப்போது மன்னிப்பு கேட்டுவிட்டு குழந்தை அவரது தந்தையுடன் தான் இருக்க வேண்டும் இது என்னுடைய விருப்பமில்லை இது தன்வியின் விருப்பம் என்று வேதா கூறுகிறார். அப்போது விக்ரம் கண்கலங்கி அழுகிறார். மேலும் தீர்ப்பும் விக்ரமுக்கு சாதகமாக வர தனது மகளுடன் அவர் மீண்டும் இணைந்து இருக்கிறார். அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்