விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மோதலும் காதலும்” என்கிற சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விக்ரமுக்கும் வேதாவிற்கும் தற்போது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்து இருக்கின்றனர். ஏனைய சீரியல்களைப் போலவே இந்த சீரியலிலும் அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்புடன் கதை நகர்ந்து வருகிறது. ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே மக்களின் மனம் கவர்ந்த தொடராகவும் மாறி போயிருக்கிறது. ஆரம்பத்தில் விக்ரம் வேதா என்கிற தலைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியல் பின்னர் மோதலும் காதலும் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இதில் விக்ரமிற்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி தன்வி என்கிற குழந்தை இருக்கிறது. வேதா குழந்தைகள் நல மருத்துவராக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரமும் வேதாவும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர்களாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் விக்ரம் வேதாவிற்கும் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது விக்ரமின் மகள் தன்வி மூலமாக இருவரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். விக்ரமின் தந்தை மொட்டை மாடியில் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். அப்போது அங்கு வரும் வேதாவின் தந்தை தன்விதான் கிடைத்துவிட்டாளே அப்புறம் எதற்கு இப்படி சோகமாக இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு என்னுடைய பையனுக்கு அடுத்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்ல, சட்டுபுட்டுன்னு ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே வேதாவின் தந்தை கூறுகிறார். அதற்கு தன்விக்கு நல்லா அம்மாவாக இருக்கனும், நான் பார்க்கும் பெண்கள் அனைத்தையும் என் பையன் வேண்டாம் என்கிறான் என்று கூறுகிறார்.
பதிலுக்கு வேதாவின் தந்தை இதுபோல எனக்கும் ஒரு பிரச்சனை இருக்கு. என் பொண்ணு குழந்தை பெத்துக்க முடியாது என்கிற காரணத்தினால் யாரும் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டார்கள் என சொல்ல, விக்ரமின் தந்தை யோசித்து சுப்பிரமணி சார் நம்ம விக்ரம் வேதாவுக்கு திருமணம் பண்ணி வைக்கலாமா? என்று கேட்கிறார். இதை கேட்டதும் வேதாவின் தந்தை சுப்பிரமணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television