விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்த மோனிஷா தற்போது டீச்சர் போல கெட்டப்பில் புது போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நடிகைகளுக்கு இணையாக அழகாக இருப்பதாக மோனிஷாவுக்கு புகழாரத்தை சூட்டி வருகின்றனர்.
யூட்யூபில் ‘பிளாக் ஷீப்’ என்னும் சேனலில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் மோனிஷா. பல யூடியூப் தொடர்களில் நடித்திருக்கும் அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்கிற நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.
அதன் பின்னர் இவருக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
குக் வித் கோமாளிக்குப் பின்னர் மோனிஷாவிற்கு பல ரசிகர்கள் உருவாகி வந்த நிலையில், சமீபத்தில் அவர் புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் . அதில், “புது காரை ஒன்றை வாங்கி இருக்கிறேன், கடவுளுக்கு நன்றி, இது கனவு போல் இருக்கிறது, ஏனென்றால் மிடில் கிளாஸில் பிறந்த பெண்ணுக்கு இது நிச்சயம் பெரிய விஷயம்தான்”.
“சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை செகண்ட் ஹேண்டில் ஒரு கார் ஒன்றை வாங்கினார். அது ஆங்காங்கே நின்று போகும். எல்லாரும் சேர்ந்து தள்ளி தள்ளி ஸ்டார்ட் பண்ணுவோம், அப்புறம் அது சுத்தமா ஓடல, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு செகண்ட் ஹேண்டில் நானோ கார் வாங்கினோம். அதை பார்த்து பலர் சிரிச்சாங்க”.
“சில பேர் அதை காரா கூட மதிக்க மாட்டாங்க. ஆனா நாங்க அதை வச்சு ரொம்ப சந்தோசமா இருந்தோம். அந்த கார் கிடைச்சது நினைச்சு மகிழ்ச்சியா இருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களுடைய ஆதரவுனால நான் இந்த காரை வாங்கி இருக்கேன்.
புது கார் வாங்கணும் என்கிறது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. கடைசியா அது நடந்திருக்கு. கடவுளுக்கு நன்றி. என்னுடைய மனது அன்பால் நிரம்பி வழிகிறது” என்று பகிர்ந்து இருந்தர்.
இந்த நிலையில் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவர் தொடர்ந்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது 90ஸ் டீச்சர் போல அவர் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
பலரும் மோனிஷா இந்த கெட்டப்பில் மிக அழகாக இருப்பதாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.