நான் சந்தித்த Violence யாருக்கும் தெரியாது – தினேஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரட்சிதா போட்ட பதிவு

சின்னத்திரை நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது இணையத்தில் போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் ரட்சிதா மகாலட்சுமி மற்றும் தினேஷ் ஜோடிகள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதை இரு தரப்பினருமே உறுதி செய்திருந்தனர். இந்த நிலையில் ரட்சிதாவுக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தனது கணவருடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரட்சிதா பிக்பாஸில் விளையாடிய போது அவருக்கு ஆதரவு கேட்டு தினேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்தார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் இணையாமலேயே இருந்து வந்தனர்.

நான் சந்தித்த Violence யாருக்கும் தெரியாது - தினேஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரட்சிதா போட்ட பதிவு 1
தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7ல் தற்போது தினேஷ் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். அவர் சமீபத்தில் கூட ரட்சிதா குறித்து பேசி இருந்தார். அதில், “தனது திருமண வாழ்க்கை சில சிக்கல்களை கொண்டுள்ளது. விரைவில் அது அனைத்தும் தீர்ந்து, நல்ல முடிவு கிடைக்கும்” என்று அவர் பேசியிருந்தார். ஆனால் தினேஷுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ரட்சிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். நான் “இவ்வளவு சாந்தமாக மாறும் முன்பு சந்தித்த வன்முறை குறித்து யாருக்கும் தெரியாது” என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவு வைரலான நிலையில் தொடர்ந்து தனது தாயாருடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தனம் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் கூறப்போகும் மீனா.! அதிரடியான Pandian Stores ப்ரோமோ.!

நான் சந்தித்த Violence யாருக்கும் தெரியாது - தினேஷுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரட்சிதா போட்ட பதிவு 3

பெங்களூருவில் இருக்கும் சிக்பலாப்பூர் என்கிற இடத்தில் ஈஷா யோகாவின் மற்றொரு கிளை செயல்பட்டு வருகிறது. தனது தாயாருடன் அங்கு சென்று இருக்கும் ரட்சிதா, “இந்த புயல் கடந்து விட்டது, இனியும் கடக்கும், இதுவும் கடந்து போகும், நான் உனக்காக எப்போதும் இருக்கிறேன், நீ மட்டும் என் வாழ்க்கையில் போதும்” என்று சொல்லி அந்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக இனி தினேஷுடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று ரட்சிதா மறைமுகமாக கூறி இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment