விசித்ரா சொன்ன ஷாக் ஸ்டோரி..! மூத்த மகன் எடுத்த முடிவு..! மனவேதனையில் விசித்ரா கணவர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா பேசியது குறித்து அவரது கணவர் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். தனது மகனால் கல்லூரிக்குக் கூட செல்ல முடியவில்லை. அவரை சமாதானம் செய்து தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சுமார் 55 நாட்களை கடந்திருக்கிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் நடிகை விசித்ரா. முந்தைய சீசன்களில் எல்லாம் இதுபோல வயது அதிகமாக உள்ள போட்டியாளர்கள் வந்தால் இரண்டு வாரங்களில் வெளியேறி விடுவது வழக்கமாக இருக்கும். ஆனால் அதில் விசித்ரா சற்று விதிவிலக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார்.

விசித்ரா சொன்ன ஷாக் ஸ்டோரி..! மூத்த மகன் எடுத்த முடிவு..! மனவேதனையில் விசித்ரா கணவர் 1

விளம்பரம்

தற்போது பூகம்பம் டாஸ்க் என்கிற பெயரில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் தங்களுக்கு வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயம் குறித்து பேசுவதற்கு பிக் பாஸ் வாய்ப்பு வழங்கினார். அதில் பேசிய விசித்ரா, தன்னிடம் முன்னணி நடிகர் ஒருவர் 2001ம் ஆண்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறாக நடந்து கொண்டதாகவும் அதன் பின்னர் 20 ஆண்டுகள் தன்னால் இந்த துறையில் இயங்க முடியவில்லை, நான் விரும்பி தேர்ந்தெடுத்த இந்த துறையில் இருந்து 20 ஆண்டுகளில் விலகி இருப்பதற்கு அந்த சம்பவம் காரணமாக இருந்தது. அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்தவர் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

தொடர்புடையவை  பாக்யா மீது காதலில் விழுந்த பழனிச்சாமி.! பாக்யா பழனிச்சாமி காதல் ட்ராக்கா? அதிர்ச்சி ப்ரோமோ

விசித்ரா சொன்ன ஷாக் ஸ்டோரி..! மூத்த மகன் எடுத்த முடிவு..! மனவேதனையில் விசித்ரா கணவர் 3

விளம்பரம்

இந்த எபிசோடு ஒளிபரப்பான பின்பு விசித்ராவின் கதை குறித்தும், அவர் கூறிய நடிகர் யார்? என்பது குறித்தும் பரபரப்பு எழுந்தது. இது குறித்து அவரது கணவர் ஷாஜி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் எதற்காக இப்போது இந்த டாப்பிக் குறித்து விசித்ரா பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை, இது குறித்து பேசினாலே அவர் மிகவும் லோ ஆகிவிடுவார், திருமணத்திற்கு பிறகு தான் இப்போதுதான் இது குறித்து பேசி இருக்கிறார். என்னுடைய பெரிய மகன் இதுபோன்ற பிரச்சனை இருந்ததா? என்று தன் என்னிடம் வந்து கேட்கிறான். இதுவரை நாங்கள் அவனிடம் இதுகுறித்து சொன்னதே இல்லை. இந்த எபிசோடு ஒளிபரப்பான பின்பு அவனால் கல்லூரிக்கு கூட போக முடியவில்லை. மிகவும் மனம் உடைந்து விட்டான்.

விசித்ரா சொன்ன ஷாக் ஸ்டோரி..! மூத்த மகன் எடுத்த முடிவு..! மனவேதனையில் விசித்ரா கணவர் 5
இனிமேல் இது குறித்து அவனிடம் விரிவாக பேசி சமாதானம் செய்து அவரை மீண்டும் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: ABP Nadu

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment