சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்” சீரியலில் இந்த இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஆதிகுணசேகரன் மனைவி ஈஸ்வரி தனது மகன் படிக்கும் கல்லூரியில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் ஆக வேலையில் சேர்ந்திருக்கிறார். அந்த வேலையை கெடுப்பதற்காக தற்போது ஆதி குணசேகரன் தனது தம்பிகளுடன் கல்லூரியை நோக்கி படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார். கல்லூரியில் ஈஸ்வரி வேலை செய்யும் இடம் எது என்று கேட்டு அந்த இடத்தை நோக்கி கோபமாக வந்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது கதைப்படி மூத்த மருமகளாக இருக்கும் ஈஸ்வரிக்கு அவரது மகன் படிக்கும் கல்லூரியிலேயே வேலை கிடைக்கிறது. மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கும் பணியில் ஈஸ்வரியை கல்லூரி நிர்வாகம் அமர்த்தி இருக்கிறது. ஆனால் அவர் இந்த வேலைக்கு செல்வதை அவரது கணவர் ஆதி குணசேகரன் கொஞ்சம் கூட விரும்பவில்லை. அவரை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று நினைக்கிறார். இந்த நிலையில் ஈஸ்வரி தான் இந்த பணியில் தொடர போவதில்லை என்று கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி அழுது கொண்டே வெளியே வந்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் தனது தம்பி படைகள் சூழ ஆதி குணசேகரன் கல்லூரிக்கு வருகிறார்.

அங்கு அவர் ஈஸ்வரி வேலை செய்யும் இடம் எது? என்று கேட்டு கல்லூரிக்குள் கோபமாக சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரில் அழுது கொண்டே ஈஸ்வரி, ஜனனி, சக்தி ஆகியோர் வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV