விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌன ராகம். இந்த நாடகம் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாடகத்திற்கு பல ரசிகர்கள் உண்டு. மௌன ராகம் சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ருதி, சத்தியா, கார்த்திக் சார், மல்லிகா, சொர்ணம், காதம்பரி, தருண், வருண் என்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். கேராளாவில் இந்த நாடகம் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது மௌனராகம். சத்யாவை கொலை செய்வதற்காக காதம்பரியும், ருக்மணியும் சேர்ந்து ஒரு ஆளை தாண்டிக்குடிக்கு அனுப்புகின்றனர். ஆனால் அங்கு சத்யாவை காப்பாற்ற முயன்ற கார்த்திக்குக்கு கத்தி குத்து விழுகிறது. இதனால் உயிருக்கு போராடும் கார்த்தி பல நாட்கள் மருத்துவமனையில் இருந்து தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அவருடன் சக்தியும் சென்னைக்கு வந்திருந்தார். சக்தியை கொலை செய்ய வந்த நபர் யார் என்று கண்டுபிடித்து விட்டனர். அந்த கொலையாளி கொடுத்த வாக்குமூலத்தின் படி ஸ்ருதியின் அம்மா காதம்பரியும் பாட்டி ருக்மணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பல நாட்களாக காட்டப்படாமல் இருந்து வந்த விஸ்வநாதன் கதாபாத்திரம் தற்போது திருப்பி கதைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வில்லத்தனங்களின் மொத்த உருவமாக இருக்கும் விஸ்வநாதன் வெளிநாடு சென்று விட்டது போன்று சில நாட்கள் அவரது கதாபாத்திரம் காட்டப்படாமல் இருந்தது. காதம்பரிக்கு ஏதாவது ஒரு பெரிய சிக்கல் நேரும் போது நான் மீண்டு வருவேன் என்று சொல்லிவிட்டு அவர் சென்றது போல இவ்வளவு நாள் அவரைக் காட்டாமலே வைத்திருந்தனர். தற்போது கதையின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக மீண்டும் விஸ்வநாதன் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வந்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ப.ரோமோவில் விஸ்வநாதன் காதம்பரியையும் ருக்மணியையும் விடுதலை செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்.அங்கு வந்த காதம்பரி மல்லிகாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ள முயற்சி செய்கிறார். ஆனால் அதனால் கோபம் கொண்ட கார்த்தி அவள் என் மல்லிகா, என் மனைவி அவள் இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பாள். நீ இந்த வீட்டை விட்டு வெளியே போ இல்லை என்றால், நான் உன்னை கொலை செய்யக்கூட தயங்க மாட்டேன் என்று காத்பரியை கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார்.. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television