ராட்சசன் மாதிரி அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி..! அருண் விஜயின் சினம் ட்ரைலர் வெளியானது.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் அருண் விஜய். தற்போது போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு வழக்கை கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது குறித்து எடுக்கப்பட்டுள்ள கதை தான் சினம். இந்த படத்தை ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கின. ஆனால் படத்தின் வேலைகள் முடிவடைந்தும், படம் வெளியாகாமலே இருந்து வந்தது. தற்போது இந்த படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்தப் படத்திற்கு ஷமீர் இசையமைத்துள்ளார். பாலக் லால்வாணி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் ஆக்ஷன் திரில்லர் உருவாகி உள்ளது. ட்ரெய்லர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராட்சசன் மாதிரி அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி..! அருண் விஜயின் சினம் ட்ரைலர் வெளியானது. 1

விளம்பரம்

இந்த நிலையில் படம் வரும் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்படும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தப் படம் அருண் விஜயின் தந்தை விஜயகுமார், தன்னுடைய சொஉள்ளனர்.ுவனமான ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக தயாரித்திருக்கிறார். அதனால் படத்திற்கான ப்ரொமோஷன் வேளையில் பட குழுவினர் இறங்கி இருந்தனர். அருண் விஜய் சமீபத்தில் யானை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மேலும் படத்தை திருடி இணையத்தில் வெளியிடும் கும்பலுக்கு எதிராக தமிழ் ராக்கர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது படமாக சினம் திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடையவை  ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஜோடியாக ரிதுவர்மா!

ராட்சசன் மாதிரி அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி..! அருண் விஜயின் சினம் ட்ரைலர் வெளியானது. 3

விளம்பரம்

தொடர்ந்து மூன்று படங்கள் வெளியானதால் அருண் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகிறது வெளியாகி உள்ளது.. அந்த டெய்லரை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Muzik247

விளம்பரம்

Leave a Comment