மௌன ராகம் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வருணின் தாயார் கஸ்தூரி உயிரோடு இருக்கும் செய்தியை ஸ்ருதியின் பாட்டி ருக்மணி ஸ்ருதியிடம் கூறியிருந்தார். தற்போது ஸ்ருதி தனது மாமியார் கஸ்தூரியை மீட்டு தனது வீட்டில் கொண்டு சேர்ப்பதற்காக, அவரை கடத்தி வைத்திருக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறார். பிரபல தொழிலதிபராக இருப்பவர் மனோகர். இவரின் இரு மகன்கள் வருண் மற்றும் தருண். இவர்களுடைய மனைவிகள் தான் அக்கா தங்கைகளாக இருக்கும் சக்தி மற்றும் ஸ்ருதி. சக்திக்கு மனோகரின் வீட்டில் எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் ஸ்ருதிக்கு அந்த முன்னுரிமை கிடைப்பதில்லை. இதற்கு காரணம் ஸ்ருதியின் தாய் காதம்பரி, தாத்தா விஸ்வநாதன், பாட்டி ருக்மணி செய்யும் தீய செயல்களால் ஸ்ருதியை யாருமே மதிப்பதில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வருணை கொலை செய்ய திட்டமிட்டது, சக்தியை கொலை செய்ய ஆள் அனுப்புவது, சக்தியின் தாயார் மல்லிகாவை கொலை செய்ய திட்டமிடுவது என்று தொடர்ந்து தீய செயல்களை செய்து கொண்டே வருகின்றனர் காதம்பரியின் குடும்பத்தினர். இதனால் ஸ்ருதி மீதும் மனோகரின் குடும்பத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.இந்த நிலையில் மனோகரின் மனைவியும் வருண் மற்றும் தருணின் தாயுமான கஸ்தூரி தீ விபத்தில் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார் என்ற செய்தி காதம்பரி குடும்பத்திற்கு தெரிய வருகிறது. காதம்பரியின் தாய் ருக்மணி இந்த விஷயத்தை நேராக வந்து ஸ்ருதியிடம் சொல்லி விடுகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஸ்ருதியும் ருக்மணியும் கஸ்தூரியை கடத்தி வைத்திருக்கும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது ஸ்ருதி தனக்கு மனோகர் வீட்டில் மரியாதையே இல்லை. இப்போது கஸ்தூரியை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டால் தனக்கு மரியாதை கிடைக்கும் என்று சொல்லி அவரை உடனடியாக மனோகரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television