ஸ்ருதி பிறப்பு பற்றிய உண்மையை ஸ்ருதியின் தாத்தாவிடம் போட்டு உடைத்த சொர்ணம்.!

வெளியிட்டது

மௌன சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலுக்கு ரசிகர்கள் மிக அதிகம். தற்போது கதைப்படி சக்தியின் அத்தை சொர்ணம் ஸ்ருதியின் டிஎன்ஏ ரிப்போர்ட்டை பார்த்து விடுகிறார். ஸ்ருதி கார்த்திக் சாருக்கு திறக்கவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். ஸ்ருதியின் தாயார் காதம்பரி ஏற்கனவே ஒருவரை காதலித்து இருப்பார். அவருக்கு பிறந்தவர் தான் ஸ்ருதி. ஆனால் அதை மறைத்து கார்த்திக்கு பிறந்ததாக ஏமாற்றி வருவார். ஒருமுறை காதம்பரியின் காதலர் ராஜேஷ் கார்த்திகை பார்த்து அனைத்து உண்மைகளையும் கூறிவிடுவார். ஆனால் ஸ்ருதி தனது மகள் தான் ராஜேஷ் பொய் சொல்கிறார் என்று கார்த்திக் அவர் சொன்னதை மறுத்துவிடுவார். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.

ஸ்ருதி பிறப்பு பற்றிய உண்மையை ஸ்ருதியின் தாத்தாவிடம் போட்டு உடைத்த சொர்ணம்.! 1

பிறகு ஒரு முறை ராஜேஷ், ஸ்ருதி தனக்கு பிறந்த மகள் தான் என்ற டிஎன்ஏ டெஸ்ட்டை எடுத்துக்கொண்டு வந்து கார்த்திக் இடம் கொடுத்து விடுவார். ஆனால் கார்த்தி இதுவரை அந்த டிஎன்ஏ ரிப்போர்ட்டை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருப்பார். இந்த விஷயம் கார்த்திக்கும் மல்லிகாவிற்கும் மட்டுமே தெரியும். உத்தனை நாள் மறைத்து மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தை தற்போது சக்தியின் அத்தை சொர்ணம் கண்டுபிடித்து விட்டார். கார்த்தியின் பீரோவில் ஏதோ ஒரு முக்கியமான ஃபைலை வைப்பதற்காக செல்லும் அவர், அந்த ரிப்போர்ட்டை கண்டுபிடித்து விடுவார். அதை சக்தியிடமும் வருணிடமும் சென்று காட்டும் சொர்ணம் இது ஸ்ருதி பற்றியது என்பதை தெரிந்து கொள்கிறார்.

தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அந்த ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு நேராக ஸ்ருதியின் தாத்தா விஸ்வநாதன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதி பற்றிய உண்மைகளை விஸ்வநாதனிடம் கூறுகிறார். அவர் ஆச்சரியத்தில் உறைந்து போகிறார். அப்பொழுது 10 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து, இதை வைத்துக்கொள் இனிமேல் இந்த விஷயம் பற்றி யாரிடம் பேசக்கூடாது என்று கூறி அந்த ரிப்போர்ட்டையும் கிழித்து போடுகிறார். 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்ட சொர்ணம் இதுபோல் தான் 50 ஜெராக்ஸ் போட்டு வைத்திருப்பதாக விஸ்வநாதனிடம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் உறைகிறார் விசுவநாதன். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்