அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி நடிப்பில் வசனமே இல்லாமல் உருவாகும் படம்.! டீசர் வெளியானது.!

வெகு நாட்களுக்குப் பிறகு வசனமே இல்லாமல் தமிழில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் உருவாக உள்ள படம்தான் “காந்தி டாக்ஸ்”. இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் அதிதி ராவ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் டார்க் காமெடி ஜானரில் வசனமே இல்லாமல் ஒரு மௌன படமாக உருவாக உள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி நடிப்பில் வசனமே இல்லாமல் உருவாகும் படம்.! டீசர் வெளியானது.! 1

விளம்பரம்

ஜாதி மதங்கள் அனைத்தையும் கடந்து பலரையும் இணைக்கும் மொழி ஒன்று உண்டென்றால் அது இசை மட்டுமே, எனவே இந்தப் படம் புதுவித அனுபவமாக இருக்கும், வசனமில்லாமல் மௌனமாக படம் எடுப்பது என்பது வித்தை காட்டுகின்ற செயலே அல்ல, மொழியை, வசனத்தை முழுமையாக நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யம் நிறைந்த சவாலான காரியம் என்று இயக்குனர் பெலேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி இந்த படத்திற்கான அறிவிப்பை ஒரு சிறிய ப்ரோமோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடையவை  என் கதையை Mariselvaraj திருடிவிட்டார்..! வாழை என்னுடைய கதை..! எழுத்தாளர் பரபரப்பு புகார்..!

அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி நடிப்பில் வசனமே இல்லாமல் உருவாகும் படம்.! டீசர் வெளியானது.! 3

விளம்பரம்

அந்த அறிமுக வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Zee Studios

விளம்பரம்

Leave a Comment