3 நாள் முடிவில் உச்சகட்டமாக 200 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்.!

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூன்று நாள் முடிவில் யாரும் செய்ய முடியாத சாதனையை செய்து வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இதனை அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 30 ஆம் தேதி வெளியான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைத்து தியேட்டர்களும் நிரம்பி வழியும் வண்ணம் டிக்கெட் முன்விற்பனையில் விற்று தீர்ந்துள்ளன.

3 நாள் முடிவில் உச்சகட்டமாக 200 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்.! 1

விளம்பரம்

எப்பொழுதும் ஒரு படம் வெளிவந்தால் அதனுடைய வசூல் குறித்த ஆர்வம் ரசிகர்களிடையே எழுவது வழக்கம். அதுபோலத்தான் பொன்னியின் செல்வன் படத்திற்கும் எத்தனை கோடி வசூலானது என்று எதிர்பார்ப்பு நிலவியது. பலரும் யூகங்கள் அடிப்படையில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவே முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி உலக அளவில் 80 கோடி ரூபாய் வசூலை பெற்றிருந்தது பொன்னியின் செல்வன் திரைப்படம். இரண்டாவது நாள் முடிவில் 150 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருந்தது. தற்போது மூன்றாவது நாள் முடிவிலும் வசூல் நிலவரத்தை லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

தொடர்புடையவை  வெளியாகியது கூலி படத்தின் சில காட்சிகள்..! கெஞ்சி கேட்டுகொண்ட இயக்குனர் Lokesh Kanagaraj..!

3 நாள் முடிவில் உச்சகட்டமாக 200 கோடி வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்.! 3

விளம்பரம்

அதன்படி படம் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருக்கிறது. நாளை சரஸ்வதி பூஜை, நாளை மறுநாள் விஜயதசமி என்று தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் அடுத்த இரண்டு நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்று நாள் முடிவில் விக்ரம் 125 கோடி ரூபாயையும், வலிமை 123 கோடி ரூபாயையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொன்னியின் செல்வன் மூன்றாவது நாளிலேயே 200 கோடியை கடந்துள்ளது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment